முடிந்தால் பறவையை கண்டுபிடியுங்கள்! வைரல் புகைப்படம்.....
- Get link
- X
- Other Apps
இணையத்தில் வைரலாகி வரும் பறவை உருமறைப்பு புகைப்படம்; முடிந்தால் நீங்களும் கண்டுபிடிக்க முயலுங்கள்.
இன்று சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாக இருப்பது இந்த புகைப்படம் தான். இதிலிருக்கும் பறவையை கண்டு பிடியுங்கள் என்கிற சேலஞ்சை வென்று காட்ட பலரும் ஒரே படத்தை பல மணி நேரமாக பார்த்துவருகின்றனர். சிலருக்கு மட்டும் இதில் பறவை இருப்பது தெரிந்தது. பலர் இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வைரல் புகைப்படத்தை பகிர்ந்தவர் IFS அதிகாரி சுசந்தா நந்தா. அவ்வப்போது, வன விலங்குகளின் வித்தியாசமான தருணங்களை அப்லோடு செய்து வருகிறார்.
அந்த வகையில், கண்களை மூடிக்கொண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையின் படத்தை பதிவிட்டு இணையத்தை பிஸியாக்கியுள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தியானம் செய்யும் ஆந்தை. கண்களை மூடிக்கொண்டு, யாராலும் கண்டறிய முடியாத உருமறைப்பைக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் முதலில் ட்விட்டர் பயனாளர் மாசிமோ என்பவரால் பகிரப்பட்டது.
பறவையின் நிறம் மரத்தின் பட்டையைப் போன்றே இருப்பதால் புகைப்படத்தின் நடுவில் ஆந்தையைக் காண பல பயனர்கள் சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர்.
இந்த போட்டோவை பகிரும் மக்கள், புகைப்படத்தில் பறவையைக் கண்டறிதல்’ போட்டிக்கு சரியானது என்றும், அதை மரத்தில் செய்திருக்கிறார்களா என்றும் கமென்டகளை அள்ளி வீசி வருகின்றனர். முடிந்தால் நீங்களும் குறிப்புகளைப் பார்க்காமல் ஆந்தையை கண்டுபிடியுங்கள்.
நேஷனல் ஜியோகிராஃபிக் கருத்துப்படி, உருமறைப்பு என்பது வேட்டையாடுபவர்களைத் தடுக்க பயன்படுத்தும் ஒரு தற்காப்பு வழிமுறையாகும்.
இதற்கு முன்பு, யானைகள் குடும்பத்தின் புகைப்படத்துடன் பதிவிட்டு பல பயனர்களையும் குழப்பமடையச் செய்தார் நந்தா. போட்டோவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையை கண்டறிய முடியாமல் நெட்டிசன்கள் குழம்பினர்.
ALSO READ : சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம் - ஆச்சரியமூட்டும் விசித்திர கதை.!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment