பளபளக்கும் அழகிய கைகள் வேண்டுமா? இது உங்களுக்கான டிப்ஸ்...
- Get link
- X
- Other Apps
சில பெண்களின் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக பளிச்சென்று ஜொலிக்கும், ஆனால் அவர்களுடைய கை, கால், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக காணப்படும்.
இதன் காரணம், நாம் முகத்தை பராமரிப்பது போன்று இவற்றை பராமரிப்பது குறைவு, அதனால் இவ்வாறு கருமையாக காணப்படும்.
அந்த வகையில் கருப்பாக இருக்கும் பாகங்களை வெள்ளையாக மாற்ற என்ன செய்யலாம் தொடர்பாக தெரிந்துக்கொள்வோம்.
இயற்கையாக பெறும் அழகே நிரந்தரமானது
தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் மாற்றமடையும்.
தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.
இரவில் படுக்கும்போது பாதாமை சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.
பப்பாளிப்பழம் சரும பிரச்சினைகளை போக்கும் எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.
மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.
கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.
ALSO READ : கைகளில் சுருக்கமா? இதனை சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்...
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment