நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் தண்ணீர் தானேன்னு நினைக்காதீங்க... அதனால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குது..!

 Drinking Water | மனித மூளை சரியாக செயல்படுவதற்கும் உடலில் உள்ள ஹார்மோன்களை சம அளவில் சுரக்க வைப்பதற்கும் நீர்ச்சத்து முக்கிய காரணியாக இருக்கிறது.


அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்களும் தேவையற்ற கோபங்களும் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எமோஷனலின் நிறுவனத்தின் துணை நிறுவனரும் முதன்மை மனநல மருத்துவரான டாக்டர் ரோமா குமார் என்பவர் உணவு பொருட்கள் எவ்வாறு மனிதர்களுடைய மனதிலும் உடலிலும் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.


அதில் தினசரி ஒருவர் சரியான அளவில் தண்ணீர் பருகும் போது அவரது உடலின் நீர்ச்சத்து சமப்படுத்தப்பட்ட ஹார்மோன்கள் மிக சரியான அளவில் சுரப்பதாக தெரிவித்துள்ளார். ஹார்மோன்கள் சம அளவில் இருப்பதால் உடலுடைய அனைத்து சுரப்பிகளும் சரியாக வேலை செய்வதினால் உடல் ஆரோக்கியமும் நன்றாகவே இருப்பதாக கண்டறிந்துள்ளார். மனித மூளை சரியாக செயல்படுவதற்கும் உடலில் உள்ள ஹார்மோன்களை சம அளவில் சுரக்க வைப்பதற்கும் நீர்ச்சத்து முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மூளையினுடைய சமநிலை பாதிக்கப்பட்டு அது நேரடியாக உடலில் ஹார்மோன் சுரப்பதை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


தண்ணீர் குடிப்பதால் உளவியல் ரீதியாக ஏற்படும் நன்மைகள்: தண்ணீர் சரியான அளவில் குடிப்பதால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கணிசமாக குறைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கவும் உதவும் கார்ட்டிசால் எனப்படும் பொருளின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது. மேலும் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கும்போது மூளை மற்றும் முதுகு தண்டில் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் வளர்ச்சி அதிகமாகுவதால் மூளையில் அதிகமாக தேங்கும் கழிவுகளையும் நீக்க உதவுகிறது. உடலெங்கும் சீரான இரத்த ஓட்டம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்துதல், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் உடலெங்கும் பரவச் செய்தல், வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியான அளவில் வைத்திருத்தல் ஆகிய நன்மைகளும் இதனால் ஏற்படுகின்றன.


நீர் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் யாவை.? சரியான அளவில் தண்ணீர் குடிக்காத போதும் அல்லது குடித்த தண்ணீர் அதிக அளவில் சிறுநீர் மாற்றம் வியர்வையாக வெளியேறுவதாலும் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படலாம். மறு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அதிகமான தாகம்,மயக்கம், சோர்வு, தலை சுற்றுதல், வாயில் வறட்சி மற்றும் உதடு மஞ்சள் நிறத்தில் மாறுவது ஆகியவை ஏற்படலாம்.


எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும்.? டாக்டர் குமாரின் அறிவுரைப்படி தினமும் நான்கிலிருந்து ஆறு கப் வரை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார். தைராய்டு, கல்லீரல் பிரச்சனைகள் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதால் இந்த தண்ணீர் குடிக்கும் அளவு அவர்களுக்கு மாறுபடலாம் எனவும் நான்கு முதல் ஆறு கப் என்பது அளவிற்கு அதிகமானதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் இயற்கையாகவே அவர்கள் உடலில் அவர்கள் எடுத்து கொள்ளும் மருந்துகளின் விளைவாகவும் நோயின் விளைவாகவும் அவர்கள் உடலில் இருந்து குறைந்த அளவு நீரே வெளியேற்றப்படுகிறது. எனவே அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப அறிந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!