நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வறட்டு இருலை ஓட விடும் சுக்கு மல்லி காபி....

 சளி, இருமல் தொல்லை உள்ளவர்களுக்கு ஏற்ற சுக்கு மல்லி  காபியை எப்படி போடுவது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

  1. மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்
  2. மிளகு
  3. காபிதூள்
  4.  சீரகம்
  5. ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  6. சுக்கு - ஒரு துண்டு, 
  7.  கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.

செய்முறை

துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். 

தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும். 

இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். 

விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம். 

பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.


ALSO READ : சரும பராமரிப்பில் புதிய ட்ரெண்டாகி வரும் மைக்ரோபயோம் ஸ்கின்கேர் பற்றி தெரியுமா..? விளக்கம் இதோ...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்