நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பீர், ஒயின்: உடலை பாதிக்காது என்பது சரியா?

 உடலுக்குள் செல்லும் எல்லா போதை வஸ்துகளும் போதை பொருட்கள்தான். ஒயினை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்கு நல்லது செய்வதில்லை.


கொரோனா அச்சுறுத்தலால் மதுக்கடைகள் ஒரு மாதத்திற்கு மேல் அடைக்கப்பட்டிருந்ததால், மது விரும்பிகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மது அருந்தாமல் இருந்த நாட்களில், உடலில் ஏற்பட்ட நடுக்கம், தடுமாற்றத்தை உணர்ந்து, 'மது இந்த அளவுக்கு உடலை பாதித்துவிட்டதே! நல்ல நேரம் தப்பித்தோம். இனிமேல் பருகக்கூடாது!' என்ற முடிவினை பலர் எடுத்திருக்கிறார்கள். இன்னொரு பகுதியினர், இந்த 'லாக் டவுன்' காலகட்டத்தில் மது அருந்த முடியாததால் மீதமான பணத்தை கணக்கிட்டுப்பார்த்துவிட்டு, இத்தனை வருடங்களாக குடிக்கு செலவிட்ட தொகையை நினைத்து மலைத்துபோய் 'இனியும் குடி தேவையில்லை' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

மது அருந்த முடியாமல் இருந்த காலகட்டம் மது பிரியர்களிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சிலர் இப்போதும் பீர், ஒயின் இரண்டையும் பெருமையாகப்பேசி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். விஸ்கி, பிராந்தி, ரம் போன்றவைதான் மது என்பது போலவும், பீர்-ஒயின் போன்றவை போதை இல்லாதது போலவும் அவர்களது கருத்து அமைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையினரின் ஆஸ்தான பானம் பீர் என்றும் சொல்லப்படுகிறது. ஐ.டி. துறையில் தலை நிமிர்ந்து நிற்கும் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியது போன்று 'பீர் பப்' களும் பெருகியது, அதற்கு ஒரு உதாரணம். இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் 'ஒரு பீர் தானே' என்று கூறி, வாய்ப்பு கிடைக்கும்போது பருகுவது வாடிக்கையானது.

பீர் பருகுபவர்கள் 'இதர மதுவகைகளை போன்று பீர் ஆபத்து இல்லாதது' என்றும், 'மற்றவைகளை காட்டிலும் இதில் ஆல்கஹால் தன்மை குறைவு' என்றும் சொல்கிறார்கள். இந்த இருவித எண்ணமுமே தவறு. எல்லா மதுவகைகளும் உடல்ரீதியாக, மனோரீதியாக எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதே பாதிப்புகளை பீரும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

 மனித உடலைப் பொறுத்தவரையில், உடலுக்குள் செல்லும் எல்லா போதை வஸ்துகளும் போதை பொருட்கள்தான். ஆல்கஹால் என்றால், எல்லாம் ஆல்கஹால்தான். அது பீர் என்றாலும், ரம் என்றாலும் ஒன்றுதான். எல்லாமும் ஆரோக்கியத்திற்கு எதிரிதான். இன்னும் தெளிவான கணக்கு ஒன்றை உங்களுக்கு கூறுகிறேன். மது விரும்பி ஒருவர் ஒரு 'பெக்' (30 மி.லி.) பிராந்தியோ, விஸ்கியோ எடுத்துக்கொள்ளும்போது அத்துடன் 200 மி.லி. அளவுக்கு தண்ணீர் சேர்த்து பருகுகிறார். 

அதாவது 230 மி.லி, அவர் பருகுகிறார். 30 மி.லி.யில் 10 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பதாக கணக்கு. அதற்கு பதில் அதே மது விரும்பி 250 மி.லி. பீர் அருந்துகிறார் என்றால், பிராந்தியில் இருந்ததைவிட அதிக அளவு ஆல்கஹால் அவரது உடலுக்குள் சென்றுவிடுகிறது. எப்படி தெரியுமா? பீரில் ஆல்கஹால் 6 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், 250 மி.லி. மூலம் அவர் உடலுக்குள் 15 மி.லி. (12 கிராம்) ஆல்கஹால் சென்றுவிடுகிறது. அதாவது 30 மி.லி. பிராந்தி பருகுவதைவிட 250 மி.லி. பீர் பருகினால், உடலுக்குள் செல்லும் ஆல்கஹால் அளவு அதிகம் என்ற இந்த உண்மையை பலரும் புரிந்துகொள்வதில்லை.

 இந்த உண்மையை உணராமல் பலர் தங்கள் ஆரோக்கியத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். கண்டபடி பீர் அருந்திவிட்டு, தொப்பை வயிற்றோடு தோன்றும் 'கவ்பாய்' நடிகர்களை ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். அவர்களது மதுப்பழக்கம் வித்தியாசமானது. காலையில் ஒரு 'பெக்' மது குடித்து விட்டு பின்பு நாள் முழுவதும் பெரும்பாலான நேரங்களில் பீர் பருகிக்கொண்டிருப்பார்கள்.

 இத்தகைய பழக்கத்திற்கு அவர்களது 'வயிறு'தான் சாட்சி. அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் நிறைய பேர் தொப்பையுடன் தோன்ற பீர் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. 'கூடுதல் போதை கிடைக்க அதிக அளவில் பீர் அருந்தவேண்டும்' என்ற எண்ணம், மது விரும்பிகளிடம் இருந்துகொண்டிருப்பதால் அளவுக்கு அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அவர்கள் 2 முதல் 5 பாட்டில் பீரை ஒரே நேஇரத்தில் பருகுகிறார்கள். 6 முதல் 10 சத வீதம் ஆல்கஹால் தான் பீரில் இருக்கும் என்ற நிலை தற்போது இல்லை. பீரில் 25 சதவீதம் வரை ஆல்கஹால் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. போதை அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பீரின் தரம் குறைந்துகொண்டே போகிறது. 

பீர் குடிப்பவர்களின் ஆரோக்கியம் கெட்டுக்கொண்டே போகிறது. சாதாரண பீரில் 4 முதல் 6 சதவீதம் ஆல்கஹால் அடங்கியிருக்கிறது. அதை 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்கும் சூட்சுமத்தையும் பீர் தயாரிக்கும் ஒருசில நிறுவனங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. 'தங்கள் நிறுவன பீர் பருகினால் போதை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை மது விரும்பிகளிடம் ஏற்படுத்தினால்தான் தாங்கள் தயாரிக்கும் சரக்குக்கு அதிக 'டிமான்ட்' ஏற்படும் என்பதை தெரிந்துவைத்திருக்கும் ஒருசில பீர் தயாரிப்பு நிறுவனங்கள், பருகுபவர்களின் உடல் நிலையை பற்றி சிந்திப்பதே இல்லை. தங்கள் பிராண்ட்டை கேட்டு வாங்கவேண்டும் என்பதற்காக ஆல்கஹால் அளவை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அதனால் மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் ஈரல் பாதிப்புகள், பீர் அருந்துபவர்களுக்கும் ஏற்படுகிறது. 'பீரும் பாலியல் செயல்பாடும்' என்ற நோக்கில், அவ்வப்போது மேற்கத்திய நாடுகளில் விவாதம் நடக் கிறது. பொதுவாகவே மது அருந்துபவர்களுக்கு பாலியல் ஆசை அதிகம் இருக்கும். ஆனால் செயல்படும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்பது நவீன மருத்துவம் சொல்லும் தகவலாகும். ஒயினை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்கு நல்லது செய்வதில்லை. 'ரெட்ஒயின்' நல்லது என்ற சிந்தனை நம்மில் பலரிடமும் உண்டு. ஆனால் அதையும் அளவின்றி பருகுகிறார்கள்.

 பலர் தங்கள் தேவைக்கு வீடுகளிலே ஒயின் தயார் செய்கிறார்கள். பெண்களும் பருகுகிறார்கள். ஆனால் ஒயினும் ஆல்கஹால்தான். அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், சிறிதளவாவது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். சர்க்கரை நோயாளிகளும், ஏற்கனவே மது அருந்தியதால் ஈரல் பாதிக்கப்பட்டவர்களும் ஒயின் அருந்திவிடக்கூடாது. ஆண்களும், பெண்களும் இப்போது குழந்தையின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு அவர்கள் ஒயின் பருகுவதும் ஒரு காரணம். குறிப்பாக ஒயின் பருகும் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளின் செயல்பாடு மந்தமாகிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லைட் பீர் ஒன்றில் 100 கலோரியும், ஒரு ரெகுலர் பீரில் 150- 200 கலோரியும் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் உடலுக்குள் இவ்வளவு கலோரி சென்றால், அதை எளிதாக அவர்களால் எரிக்கமுடியாது. அதனால் அவர்கள் உடல் மேலும் பாதிப்பிற்குள்ளாகும். அதோடு பீர் பிரியர்கள் குடித்ததும், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்கிறார்கள். 

அதுவும் அவர்கள் உடலை கூடுதலாக பாதிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பீர் பருகுவதையும் தவிர்க்கவேண்டும். ஊரடங்கு உத்தரவு தளர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்து மது கடைகள் திறந்தாலும், மது விஷயத்தில் உங்கள் மனக்கதவுகளை திறந்துவிடாதீர்கள். மது கடைகள் தொடர்ந்து பூட்டப்பட்டதாகவே நினைத்துக்கொள்ளுங்கள். பீர், ஒயின் எல்லாம் மதுதான். அவைகளில் எதை பருகினாலும் உடலுக்கு அது கெடுதிதான்.


also read : உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!