நீரேற்றம் மற்றும் ஒளிரும் நிறத்திற்காக சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் அதன் பண்புகளுக்காகவும் microbiome சரும பராமரிப்பு பிரபலமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாசு மருவற்ற, பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையாக உள்ளது. நம் சருமம் ஆரோக்கியத்தை பராமரிக்க பல டிப்ஸ்கள், பல வழிமுறைகளை மாற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஆனால் ஸ்கின் மைக்ரோபயோம் (Skin microbiome) தோல் பராமரிப்பு பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா.? இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றால் இங்கே இந்த சரும பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மைக்ரோபயோம் ஸ்கின் கேர் ட்ரெண்ட் என்பது புதுமையான, அறிவியல் ஃபார்முலாக்களின் உதவியுடன் தோல் ஆரோக்கியத்தில் சமநிலையை மீட்டெடுக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது. மைக்ரோபயோம் முழுமையான தோல் பராமரிப்புக்கான சிறந்த ரகசியமாக இருக்கிறது. ஸ்கின் மைக்ரோபயோம் மற்றும் நானோடெக்னாலாஜி அழகு மற்றும் ஒப்பனைத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடலை போலவே நம் சருமமும் சொந்த தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகளால் நிரம்பியுள்ளது. கண்ணுக்கு தெரியாத இவை தான் Skin microbiome என்று அழைக்கப்படுகின்றன. அவை நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் முக்கிய பகுதியாகும். உங்கள் மைக்ரோபயோம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பல காரணிகள் இருந்தாலும், ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியம் என்று வரும் போது நம் சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் ஒரு மைய புள்ளியாக மாறியுள்ளன.
சருமத்தில் காணப்படும் சமநிலையற்ற மைக்ரோபயோம்கள் தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, அதிகப்படியான குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்கள் முகப்பருவுக்கு வழிவகுக்கும். அதே போல தோலழற்சி மற்றொரு வகை பாக்டீரியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சருமத்தின் நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைக்கும் தயாரிப்புகளை பயன்படுத்தாமல் அவற்றை ஆரோக்கியமாக அதே சமயம் சரியான அளவில் வைத்திருக்க உதவும் தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பலர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவே Skin microbiome ட்ரெண்ட் என்று குறிப்பிடப்படுகிறது.
நீரேற்றம் மற்றும் ஒளிரும் நிறத்திற்காக சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் அதன் பண்புகளுக்காகவும் microbiome சரும பராமரிப்பு பிரபலமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உணவு முதல் இருந்து அழகுத் துறை வரை சைவ பொருட்களை பயன்படுத்தும் தயாரிப்புகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. முன்பை விட தங்கள் சருமத்தில் எதை பயன்படுத்த வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
முன்னணி பிராண்டுகள் கூட இப்போது தங்கள் சரும பராமரிப்பு தயாரிப்புகளில் கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட்ஸ், இலவங்கப்பட்டை, பால் மற்றும் தயிர் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இவை தோல் நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொண்டு சரும ஆரோக்கியத்தை மட்டுமின்றி ஒருவரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சருமத்தில் ஆரோக்கியமான மைக்ரோபயோம் இருப்பதற்கான அவசியத்தை சுற்றுசூழல் மாசு, கடும் வெயில், சருமத்திற்கு ஒவ்வாத தயாரிப்புகள் ஏற்படுத்துகின்றன. ஆரோக்கிய மற்றும் சமநிலை microbiome சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. இது முகப்பருக்கள், தோல் அழற்சி, தோல் சிவத்தல், அரிக்கும் தோலழற்சி மற்றும் தோல் தடிப்பழற்சி போன்ற பல சரும கோளாறுகளை தடுக்கிறது.
தவிர சருமத்தில் உள்ள கிருமிகளை விரட்டுகிறது மற்றும் புற ஊதா கதிர்களுக்கு நம் சரும செல்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதிலும் ஸ்கின் மைக்ரோபயோம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சமீப காலமாக சரும பராமரிப்பில் ஆரோக்கியமான தோல் நுண்ணுயிரியை பராமரிக்க வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற உயிர் மூலக்கூறுகள் அடங்கிய skin microbiome சரும தயாரிப்புகள் பிரபலமாகி வருகின்றன.
Comments
Post a Comment