பாலில் 1 ஸ்பூன் இதை மட்டும் கலந்து குடிங்க! முதுகு வலி ஓடிடும்....
- Get link
- X
- Other Apps
பொதுவாக பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போடு எலும்புகளின் செயற்திறன் குறைவடையும், இது போன்று ஏற்படும் சிலர் மருத்துவரை நாடுவார்கள் அல்லது நாட்டு வைத்தியம் செய்து சரிச் செய்துக் கொள்வார்கள்.
இவர்கள் மருத்துவரை நாடும் போது இதுக்கான நிரந்தர தீர்வைப் பெற முடியாது. ஏனெனின் சில ஹார்மொன்ஸ் மாற்றங்களினால் இது நடைப் பெறுகிறது.
அந்த வகையில் இது போன்று பிரச்சினை உள்ளவர்களுக்கு சூப்பரான பானம் செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்தால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் குணமடையும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய ராகி மாவு – 1 கப்
கருப்பு எள்ளு – 1/4 கப்
பாதாம் பருப்பு – 15
சோம்பு – 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
அடுப்பில் ஒரு கடாயை அதனை இளம் சூட்டில் வைத்து முளைகட்டிய ராகி மாவை இதன் பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு படபடவென பொறியும் அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும்.
இதனைதொடர்ந்து வருத்த இந்த மாவை ஒரு பவுலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவை ஒரு அகலமான போத்தலில் போட்டு காற்று உட்புகாதவாறு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து தினமும் காலையில் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் சேர்த்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதால் எலும் தொடர்பான பிரச்சினை ஏற்படுவது குறைவாக இருக்கும்.
குறிப்பு - நாம் வியாபார நிலையங்களில் வாங்கும் பால்மாக்களை விட அதீத சத்துக்கள் நிறைந்தது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம். (ஆண், பெண்)
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment