தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை இப்படி எடுத்துக்கோங்க! பல அதிசயங்கள் நிகழுமாம்...
- Get link
- X
- Other Apps
பழங்காலத்திலிருந்தே நெய்யுடன் வெல்லம் கலந்து சாப்பிடும் இந்த முறை ஒரு ஆயுர்வேத முறையாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வெல்லம் உடலில் இரத்த சர்க்கரை அளவை பெரிதாக அதிகரிப்பதில்லை. மேலும் வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன.
மேலும் நெய்யில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் வைட்டமின் டி யை கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் கே மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கால்சியம் சத்துக்களும் உள்ளது.
எனவே இவ்விரண்டு கலவையும் சேரும் போது உடலுக்கு நல்ல பயன்களை அள்ளித்தருகின்றது. அந்த வகையில் நெய்யுடன் வெல்லத்தை கலந்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும்?
ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிது வெல்லத்தை கலந்து மதிய உணவிற்கு பிறகு அதை எடுத்துக்கொள்ளலாம். அதிக ஆயுர்வேத நன்மைகளை அளிக்கும் இந்த வெல்லம் நெய் கலவையை உங்கள் உணவுக்கு பிறகு சேர்த்துக்கொள்ளவும்.
இதை மதிய நேரத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளவும், ஏனெனில் இரவு நேரங்களில் எடுத்துக்கொள்ளும்போது இது செரிமான அசெளகரியங்களை ஏற்படுத்தலாம்.
நன்மைகள்
மதிய உணவிற்கு பிறகு நெய் வெல்லம் கலந்த கலவையை எடுத்து கொண்டால் பசியை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது சருமத்திற்கும் நன்மை பயக்கிறது என கூறப்படுகிறது.
வெல்லம் மற்றும் நெய் இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வை பராமரிக்கவும் உதவுகின்றன. எனவே இவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது அது உடல் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது.
முடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. மேலும் நல்ல மனநிலையை ஏற்படுத்துவதற்கும் இவை உதவுகின்றன.
also read : வாழ்நாள் முழுவதும் வயிற்று பிரச்சினை வராமல் இருக்கனுமா? பழைய சோறு செய்யும் அதிசயம்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment