நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கைகளில் சுருக்கமா? இதனை சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்...

 முன்னெல்லாம் வயதாகினால் தான் கை சுருக்கம் பிரச்சனை ஏற்படும்.

ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதில் உள்ளவர்களுக்கே கைகளில் சுருக்கம் ஏற்பட்டு தோல் அழகையே கெடுத்துவிடுகிறது .

இதனை போக்க பலர் கண்ட கண்ட கிறீம்களை வாங்கிப்போடுவதுண்டு. இது தற்காலிக தீர்வினை தான் தரும். இதனை எளியமுறையில் குறைக்க அசத்தலான டிப்ஸ் இங்கே பார்ப்போம்.  


தேவையான பொருள்


  • கேரட் – 1
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • தண்ணீர் – சிறிதளவு

செய்முறை


  • முதலில் ஒரு கேரட்டை எடுத்து மேல் உள்ள தோலினை சீவிவிட்டு கேரட்டை சீவிக்கொள்ளவும்.

  • அடுத்து ஒரு சிறிய கிளாஸ் பாட்டிலில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளவும்.

  • துருவி வைத்துள்ள 1 டீஸ்பூன் கேரட் துகள்களை தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும். இப்போது இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

  • அடுத்து தனியாக ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளவும்.

  • கொதிக்கின்ற நீரில் பாட்டிலில் மிக்ஸ் செய்து வைத்துள்ளதை வேக வைத்த நீரில் வைக்கவும்.

  • ஐந்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்துவிடலாம். அடுத்து அந்த ஜாடியை ஒரு இருட்டு அறையில் 2 நிமிடம் வைக்கவும்.

  • 2 வாரம் கழித்து கை சுருக்கம் உள்ள இடத்தில் அந்த ஆயிலை தினமும் தடவிவர கை சுருக்க பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!