நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தீபாவளி ஸ்பெஷல்: சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி ருசிக்கலாம்....

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று பிரியாணி.


அந்த வகையில் அனைவருக்கும் விருப்பமான சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • நாட்டுக்கோழி - முக்கால் கிலோ
  • சீரகச்சம்பா அரிசி - அரை கிலோ
  • பெரிய வெங்காயம் - 200 கிராம்
  • சின்ன வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 200 கிராம்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 4 பற்கள் பச்சை
  • மிளகாய் - 5
  • கொத்தமல்லித் தழை -  2 கைப்பிடி
  • புதினா -  ஒரு கைப்பிடி
  • கெட்டித் தயிர் - கால் கப்
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • பிரியாணி மசாலா- 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை - கால் மூடி
  • ப்ரிஞ்சி இலை - 3
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு


தயாரிப்புமுறை

  • முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கொள்ளுங்கள்.
  • அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், இதனுடன் கொத்தமல்லி, புதினா இலையை சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, பச்சை மிளகாய், தயிர் சேர்க்கவும்.
  • இதனுடன் மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து நாட்டுக்கோழியை சேர்த்து கிளறிவிடவும், இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கோழி வேக விடவும்.


  • முக்கால் வாசி வெந்தவுடன், அரிசியின் அளவை விட ஒன்றரை மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதித்த பின்னர், அரிசியை போட்டு மூடி வைத்து வேகவிடவும், முக்கால் பாதி வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிடவும்.
  • தண்ணீர் முழுவதுமாக வற்றிய பின்னர், பிரியாணியை தம் போட்டு கிளறி விட்டால் சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார்!!!





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்