நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடேங்கப்பா..290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

 பிரேசில் அமேசான் காட்டில் உள்ள 290 அடி உலகின் மிக உயரமான மரத்தை விஞ்ஞானிகள் நேரில் சென்று கண்டடைந்தனர்.

டிஸ்கவரி சேனலின் தமிழ் டப்பிங் மூலமாக 'அமேசான் காடுகளில் உள்ள அரிய வகை உயிரினம் இது, அரிய வகை மூலிகை இது' என்ற வாக்கிய பிரயோகங்களை நாம் ஜாலியாக பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் விஞ்ஞானிகள் தற்போது உண்மையாகவே அமேசான் காடுகளில் அரிய வகை மரத்தை நேரில் சென்று கண்டுபிடித்துள்ளனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் தான் இந்த அமேசான் மழைக் காடுகள் உள்ளன. உலகின் மிக அடர்த்தியான இயற்கை உயிரோட்டம் மிக்க இந்த காடுகளில் தான் அரிய வகை மரங்கள் காணப்படுகின்றன.

அப்படி தான், பிரேசில் நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள இரடாபுரி நதி இயற்கை வன காப்பகத்தில் 290 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஏஞ்சலிம் வெர்மெலோ 'Angelim Vermelho' என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மரத்தின் அறிவியல் பெயர் Dinizia excelsa. இந்த மரம் 88.5 மீட்டர் அதாவது 290 அடி உயரமும், 9.9 மீட்டர் (32 அடி) சுற்றளவும் கொண்டது.

தோராயமாகப் பார்த்தால் 25 மாடி கட்டத்தின் உயரம் இந்த மரத்திற்கு உள்ளது. 2019ஆம் ஆண்டில் 3டி மேப்பிங் திட்டத்திற்காக செயற்கை கோள் புகைப்படம் மூலம் இந்த மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த மரத்தில் நேரில் சென்றடைய மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டிருந்த விஞ்ஞானிகள், கடுமையான பிரயாணத்தின் மூலம் இந்த மரத்தை நேரில் கண்டடைந்தனர். 19 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு படகு, நடைப்பயணம், மலையேற்றம் என சாகசமான முறையில் 10 மேற்பட்ட நாள்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.பயணக்குழுவில் வந்த ஒரு நபரை விஷமுள்ள சிலந்தி கடித்ததால் அவரால் பயணத்தை தொடர முடியவில்லை.

இருப்பினும் இத்தனை கஷ்டங்களை தாண்டி மிகுந்த நிறைவை தருவதாக பாரஸ்ட் இன்ஜினியர் டியோகோ அர்மேன்டே சில்வா தெரிவிக்கிறார். இவர் தான் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார். இதுவரை மனிதர்கள் காலடி எடுத்து வைக்காத காட்டுப் பகுதியில் நாம் முதல்முறையாக நுழைந்துள்ளோம் என மகிழ்ச்சி திளைப்பில் அவர் கூறுகிறார். இந்த குழு அங்கு முகாமிட்டு மரத்தின் இலைகள், பட்டைகள், மண் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து வைத்துள்ளனர். முதல்கட்ட கணிப்பின் படி இந்த மரம் 400 முதல் 600 ஆண்டுகள் வயது கொண்டிருக்கும் எனக் கூறுகின்றார்கள்.

அமேசான் காடு பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி எடுப்பதும், காடுகளை அழிப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விஞ்ஞானிகளின் இந்த செயல்பாடு இயற்கையின் மகத்துவத்தின் குறித்து மக்களை கவனம் கொள்ள வைக்கிறது. பிரேசிலின் அமேசான் காடுகள் மிக மோசமான முறையில் அழிக்கப்படுகின்றன எனவும், கடந்த 10 ஆண்டுகளில் காடுகள் அழிப்பு 75 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கவலை கொள்கின்றனர்.



ALSO READ : ஒரு லிட்டர் தேள் விஷம் 80 கோடி ரூபாய் - எங்கே?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்