நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இது குப்பை இல்லை ஹேண்ட் பேக்! பேஷன் ஷோவை ஆச்சரியப்படுத்திய லேஸ் பாக்கெட் கைப்பை!

 நாம் தினமும் பெட்டிக் கடையில் பார்க்கும் லேஸ் பாக்கட்டை ஆடம்பர ஆடை அலங்கார பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் கைப்பையாகத் தயார் செய்து அறிமுகம் செய்துள்ளது.


பாலென்சியாக (Balenciaga) என்ற பிரபல ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் பாரிஸ் பேஷன் விழாவில் லேஸ் வடிவில் வடிவமைத்த கைப்பையை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த கைப்பையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதைப் பார்த்த நெடிசன்கள் விலகா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாரிஸ் பேஷன் விழாவில் நடைமேடையில் நடந்து வந்த மாடல் கையில் சிப்ஸ் பாக்கெட் இருந்துள்ளது. அதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்ட நிலையில் அது உண்மையில் ஒரு பை என்பதைத் தெரிவித்துள்ளனர்.

லேஸ் நிறுவனத்துடன் கைகோத்து இந்த வித்தியாசமான கைப்பையை உருவாக்கியுள்ளனர். நெட்டிசன்கள் பலரும் கடையில் லேஸ் சிப்ஸ் வாங்கி அதைப் புகைப்படம் எடுத்துத் தான் அந்த ஆடம்பர விலை உயர்ந்த கைப்பையை வைத்துள்ளனர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். அந்த அளவிற்கு லேஸ் சிப்ஸ் பாக்கெட்டிற்கும் கைப்பைக்கும் பத்து பொருத்தங்களும் பக்காவாக உள்ளது.

லேஸ் பையில் புகைப்படத்தை நிறுவனத்தின் வடிவமைப்பாளர் டெம்னா குவாசலியா (Demna Gvasalia) வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு, மஞ்சல் மற்றும் நீலம் என்று மூன்று நிறங்கள் இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து லேஸ் நிறுவனமும் கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஃபேஷன் என்று பலவிதமான ஆடம்பர அலங்காரப் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவருவதில் இதும் ஒன்று என்று இணைந்துள்ளது.


ALSO READ : கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்