ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?
- Get link
- X
- Other Apps
என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து சாப்பிட்டாலும் வடகறி என்றால் அலாதி சுவை தான்.
நறுமண பொருட்களுடன் வடகறியின் மணமும், சுவையும் பலரையும் சுண்டி இழுக்கும், பெரிய பெரிய ஹொட்டல்களை விட தெருவோர தள்ளுவண்டி கடையில் காரசாரமாக இருக்கும்.
அந்த ஸ்டைலில் வீட்டிலேயே வடகறி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வடகறிக்கு
கடலைப்பருப்பு - 1 கப்
வரமிளகாய்- 3 அல்லது 4
சோம்பு- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
தனியா தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
தேங்காய்- அரை கப்
முந்திரி- 2
செய்முறை
முதலில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து, இதனுடன் வரமிளகாய், சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறிய சிறிய வடைகளை தட்டி எடுத்து பொரித்தும் எடுத்துக் கொள்ளலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கி வைத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும், அடுத்ததாக இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
இதனுடன் தக்காளியை நன்றாக மசித்து சேர்த்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் உதிரி உதிரியாக இருக்கும் வடைகளை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், கடைசியாக முந்திரி சேர்த்து அரைத்த தேங்காய் பாலை சேர்த்து கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கினால் சுவையான வடகறி தயார்!!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment