வாழ்நாள் முழுவதும் வயிற்று பிரச்சினை வராமல் இருக்கனுமா? பழைய சோறு செய்யும் அதிசயம்....
- Get link
- X
- Other Apps
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு.
ஆனால் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு களால் பழைய சோற்றின் மகத்துவம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவை விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.
பழைய சோற்றின் மகத்துவம்
பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பழைய சோறு தீர்வாக இருக்கின்றது.
பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.
சோற்றை தண்ணீரில் ஊற வைக்கும்போது அது நொதிக்கையில் காற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அவை உள் இழுத்துக் கொள்கின்றன.
முந்தைய நாள் இரவு ஊற வைத்த பழைய சோற்றை தினசரி தொடர்ந்து சாப்பிட்டால் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது.
ALSO READ : சத்து நிறைந்த நட்ஸ் பாயாசம்.....
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment