நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொசுவுக்கு உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? அட ‘இது’ தான் காரணமா?

 Mosquito Magnets: கொசுக்கடிக்கு காரணம் இதுதானா? இனிமேல் கொசு உங்களை கடித்தால், அதற்கான காரணம் கொசுவுக்கு உங்களை அதிகம் பிடித்தது தான் என்று சொல்ல வேண்டாம்...  


  • கொசுக்கடி தாங்கலை என அலறும் நபரா நீங்கள்?
  • கொசுவுக்கு உங்களை பிடிக்க காரணம் இதுதான்
  • சருமத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கொசுத்தொல்லை அதிகம்

 கொசுக்கடி என்பது எரிச்சல் ஊட்டுவது மட்டுமல்ல, பல நோய்களுக்குக் காரணம் ஆகும் தொல்லை ஆகும். சிலரை கொசு மிகவும் அதிகமாக கடிக்கும், ஆனால், சிலரை கொசு அதிகமாக கடிக்காது. இதை, ‘கொசுவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்’ என்று சிலர் வருத்தத்துடன் சொல்வதுண்டு. கொசு தொடர்பான ஆராய்ச்சி ஒன்று, கொசு ஒருவரை அதிகமாக கடிக்க காரணம் என்ன என்று கண்டறிந்துள்ளது. அதன்படி, கொசுவை ஈர்க்கும் ‘உடல் வாசனை’ இருப்பவர்களை கொசு மிகவும் காதலிக்கிறதாம்!! காந்தம் போல ஈர்க்கும் இந்த வாசனையானது, பிறரைவிட 100 மடங்கு அதிகமாக கொசுவை ஒருவரிடம் ஈர்க்குமாம். அது என்ன வாசனை? 

இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களை உற்பத்தி செய்யும் நபர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. "உங்கள் தோலில் இந்த பொருட்கள் அதிக அளவில் இருந்தால், கொசு உங்களையே சுற்றிச் சுற்றி வரும்... உங்களை கொசு கடிப்பதற்கு வேறு காரணமே தேவையில்லை” என்று நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெஸ்லி வோஷால் கூறுகிறார்.

செல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சிலர் உண்மையில் "கொசுக் காந்தங்கள்" என்றும், அது அவர்கள் வாசனையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரின் உடலும் சில விதமான வாசனைகளை வெளியிடும். இந்த தனித்துவமான வாசனை என்பது, பல்வேறு இரசாயன கலவைகளை உள்ளடக்கியது, இது காதலுக்கும் காமத்துக்கும் மட்டுமல்ல, கொசுவையும் மனிதர்களை நோக்கி ஈர்க்க வைக்கும் இரசாயனங்களாக இருக்கிறது. 

உடலில் இருந்து கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் நபர்களை கொசுக்கள் அதிகம் விரும்புகின்றன. கொசுவுக்கு ஒருவரை பிடிப்பதற்கு இந்த கார்பாக்சிலிக் அமிலங்கள் மட்டும் தான் காரணம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துவர்க்காக பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், கொசு ஒருவரை அதிகம் கடிப்பதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியும் பரிசோதனையை வடிவமைத்தனர் என்று பயோடெக் நிறுவனமான கிங்டம் சூப்பர் கல்ச்சர்ஸின் மூத்த விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான மரியா எலினா டி ஓபால்டியா கூறினார்.

ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 தன்னார்வலர்கள் குறைந்தது ஆறு மணிநேரம் தங்கள் முன்கைகளைச் சுற்றி நைலான் உறைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் தனித்துவமான வாசனையையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துக் கொண்டனர். பிறகு, மஞ்சள் காய்ச்சல், ஜிகா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் நிறைந்த மூடிய கொள்கலனில் நீண்ட குழாயின் முடிவில் வெவ்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து இரண்டு மாதிரிகளை வைத்தனர்.

ஆராய்ச்சி பல மாதங்களாக தொடர்ந்தது. அவ்வப்போது தன்னார்வலர்களிடமிருந்து புதிய மாதிரிகளும் பெறப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்றன. இந்த் ஆய்வின் முடிவில்தான், கார்பாக்சிலிக் அமிலங்களை உருவாக்கம்தான் கொசு, ஒருவரை அதிகம் கடிப்பதற்கான காரணம் என்று தெரிந்துள்ளது. இந்த அமிலம், "க்ரீஸ் மூலக்கூறுகள்" என்றும், இவை நமது சருமத்தை ஈரப்பதமாக பாதுகாக்கவும் உதவுகின்றன. வெவ்வேறு நபர்களின் உடலில் இருந்து உருவாகும் கார்பாக்சிலிக் அமிலத்தின் அளவு மாறுபாடு தான் கொசுக்களின் விருப்பத்தைத் தீர்மானிக்கின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது.  

பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆய்வு, உணவு அல்லது தனிப்பட்ட சுகாதாரம் போன்ற எந்த தனிப்பட்ட காரணிகளும் கொசுக்களின் விருப்பத்தை முடிவு செய்யவில்லை, கார்பாக்சிலிக் அமிலம் மட்டுமே உங்களை கொசுக்கடி மற்றும் அதனால் உருவாகும் நோய்களுக்கு ஆதாரமாக இருப்பதாக தெரிவித்தனர். கொசுவுக்கு உங்களை பிடித்திருக்கிறதா? இல்லையா?

ALSO READ : மழையில் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்