நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக் கொண்டால் இதுதான் காரணம்! எச்சரிக்கை அவசியம்...

 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.   


  • மொபைல் சார்ஜிங் குறித்த அடிப்படை விஷயங்கள்
  • சீக்கிரம் பேட்டரி குறைவது இந்த காரணங்களால் தான்
  • நீங்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்

ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால், முன்னச்சரிக்கையாக நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இணைய பாதுகாப்பு 

சார்ஜ் சீக்கிரம் தீர்ந்தால், ஸ்மார்ட்போனில் இணைய பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருந்தால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கட்டாயம் இன்ஸ்டால் செய்து இணைய திருட்டில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். 

பழைய சார்ஜர் 

பழைய சார்ஜரை தூக்கி போட்டுவிட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு உங்களிடம் இருந்தால், 30 நிமிடங்களில் உங்கள் மொபைலை டெட் பேக்கிலிருந்து 50% பேட்டரி வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். உங்களுக்கு ஒரு மணிநேரம் இருந்தால், அதை முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜர்களில் வெறும் 10 நிமிடங்களில் பேட்டரியை இரட்டை இலக்கங்களால் அதிகரிக்கலாம். எனவே உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால், எப்போதும் ஃபாஸ்ட் சார்ஜர் விருப்பத்திற்குச் செல்லவும்.

வயர்லெஸ் சார்ஜர் 

உங்கள் ஐபோனை சார்ஜ் செய்வதற்கான இரண்டாவது வேகமான வழி Apple's MagSafe சார்ஜர் மற்றும் 20-வாட் பவர் அடாப்டர் ஆகும். ஆனால் இது வேலை செய்ய, iPhone 12 அல்லது iPhone 13 ஐ வைத்திருக்க வேண்டும். உங்கள் ஐபோன் செயலிழந்துவிட்டால், 30 நிமிடங்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 30% பேட்டரியைப் பெறுவீர்கள். 

கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

பெரும்பாலான நேரத்தை கணிணி முன் பயன்படுத்தும் நீங்கள், கணிணி வழியாகவே சார்ஜ் செய்யவும் முயற்சிப்பீர்கள். அது மிகவும் தறவான அணுகு முறை. எப்போதும் உரிய சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்வதை மட்டுமே நீங்கள் வாடிக்கையாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் சார்ஜ் ஆகும்போது மொபைலை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். 

அடிப்படை விஷயங்கள்

சார்ஜ் வேகமாக ஆக வேண்டும் என்றால் மொபைலின் பிரைட்னஸை குறைத்துவிடுங்கள். மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கலாம். பேட்டரி ஆப்டிமைஸை ஆன் செய்து வையுங்கள். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!