உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? முல்தானி மெட்டியுடன் இந்த பொருட்களை சேர்த்து பயன்படுத்தி பாருங்க....
- Get link
- X
- Other Apps
முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள்.
முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.
முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இதுசருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும்,சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது.
இதனுடன் ஒரு சில பொருட்களை பயன்படுத்தும் போது முகம் இன்னும் பொலிவு பெறுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு டேபிஸ் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு காய விடவும். குளிர்ந்த தண்ணீர் விட்டு கழுவதும். இதை வாரத்தில் 2 முறை முயற்சி செய்யலாம். இதனால் மிருதுவான சருமம் கிடைக்கும். சருமத்தில் எரிச்சல் குறையும்.
ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வேம்பு பவுடர் ஆகியவற்றை மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டிராப் வினிகர் ஆகியவற்றை சேர்க்கவும் இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி காய விட்டு, பின்னர் கழுவவும். வாரத்தில் ஒரு நாள் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். இது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவை மறையும்.
பொலிவான சருமத்திற்கு ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து, அதனுடன் பப்பாளி அல்லது ஸ்ட்ராபெர்ரி பழம் சேர்த்து கலக்கவும். இதை கழுத்து, முகத்தில் தடவி பின்னர் கழுவவும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 2 ஸ்பூன் இளநீர் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். குளுமையான தண்ணீர் வைத்து கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். இது முகத்துக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். முகம் பளபளப்பாக மாறும்.
ALSO READ : இயற்கையான முறையில் அழகை பாதுகாக்கும் வழிகள்.......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment