நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒலிம்பிக் சின்னம்: ஏன் 5 வளையங்கள்.. 6 நிறங்கள் எதனை குறிக்கிறது.. தெரிந்துக்கொள்ள வேண்டிய பின்னணி!

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டியின் சின்னத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கவுள்ளது.

இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ஒலிம்பிக் சின்னத்திற்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது.
ஒலிம்பிக் சின்னம்

ஒலிம்பிக் போட்டிகள் 1896ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ சின்னம் 1913ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பெய்ரே டி கௌபெர்டின் தான் ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கியவர். ஆனால் அந்த சின்னம் 1920ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.

சின்னத்தின் பின்னணி

ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும். அந்த 5 வலையளங்களும் அமெரிக்க, ஆஃப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானா ஆகிய 5 கண்டங்களை குறிக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஒரே இடத்தில் சங்கமித்து ஒன்றாக போட்டியில் கலந்துக்கொள்கின்றன. பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே இடத்தில் குவிகின்றனர். இதனை குறிப்பிடும் வகையில் தான் வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளது.

சின்னத்தின் நிறங்கள்

ஒலிம்பிக் சின்னத்தின் 5 வளையளங்களும் 5 வெவ்வேறு நிறங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் (நீளம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு). இந்த 5 நிறங்கள் 5 கண்டங்களை குறிக்கிறது என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அது உண்மை காரணம் அல்ல. 5 வலையளங்களுக்கு பொதுவாக வெள்ளை நிற ‘பேக் ரவுண்ட்' கொடுக்கப்பட்டிருக்கும். எனவே உலகின் அனைத்து நாடுகளின் தேசிய கொடியிலும், ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 6 நிறங்களில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.

சின்னத்தில் மாற்றம்

1913ம் ஆண்டு கௌபெர்டின் ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கப்பட்ட பிறகு தற்போது வரை ஒரே ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னப்படாமல், பிரிக்கப்பட்டது போன்று மாற்றி வடிவமைக்கப்பட்டது. ஆனால் 2010ம் ஆண்டு மீண்டும் பழைய சின்னத்திற்கே மாற்றி அமைத்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!