நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“யானை உலக்கை போல இருக்கிறது” உண்மையை உணர்த்தும் கதை!

 நம் காலத்தில், இப்படி அடிக்கடி நிகழ்வதைப் பார்க்க முடியும், ஒரு சமுதாயம் என்பது எல்லா துறைகளும் உள்ளடக்கியதுதான்.


ஒரு ஊர்ல பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள் மூன்றுபேர் இருந்தார்களாம். அவர்கள் யானையைப் பார்க்க வேண்டும் என ஆசை பட்டார்களாம். பார்வைத் திறன் இல்லாதவர்கள் எப்படி அதை பார்ப்பது என்று ஆலோசனை நடத்தி, பிறகு யானையை தொட்டுப் பார்த்து அதை தங்களின் மனக்கண்களால் உணரலாம் என முடிவெடுத்தார்களாம்.

அதன்படி, மூவரும் ஒரு யானையை தொட்டுப் பார்த்தார்களாம். ஒருவர் யானையின் துதிக்கையைத் தொட்டுப்பார்த்துவிட்டு “யானை மரம்போல இருக்கிறது” என்று சொன்னாராம். இன்னொருவர், யானையின் தந்தத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு “யானை உலக்கை போல இருக்கிறது” என்றாராம். மற்றொருவர் யானையின் வயிற்றுப் பகுதியை தொட்டுப் பார்த்துவிட்டு “யானை பாறை போல இருக்கிறது” என்று கூறினாராம்.

அவர்கள் அதுகுறித்து பேசி விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்யிட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாம். “நான் யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டுதான் சொல்கிறேன், யானை உலக்கை போலத்தான் இருக்கிறது பாறைபோல இல்லை” என்று இரண்டாம் நபர் மூன்றாம் நபரிடம் தொடர்ந்து விவாதம் செய்துகொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர். இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நின்று கவனித்து, பிறகு அவர்களிடம் விசாரித்தாராம். அவர்கள் நடந்ததை சொல்ல, அப்போது அந்த முதியவர் சொன்னாராம், “நீங்க தொட்டுப் பார்த்தது எல்லாமே யானைதான் ஆனால், அவை அனைத்தும் யானையின் ஒவ்வொரு பாகங்கள்” என்று கூறி விளக்கம் கொடுத்தாராம். அதன் பின்னர் அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்களாம்” இப்படி ஒரு கதையை கிராமங்களில் சொல்வது வழக்கம். எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுபவர்களை கிண்டல் சொய்து “முழுமையில் பார்க்க வேண்டும்” என்பதை உணர்த்துவதற்காக இது சொல்லப்படுவதுண்டு.

நம் காலத்தில், இப்படி அடிக்கடி நிகழ்வதைப் பார்க்க முடியும், ஒரு சமுதாயம் என்பது எல்லா துறைகளும் உள்ளடக்கியதுதான். ஏதாவது ஒரு துறை மட்டுமே வாழ்க்கையில் இருப்பதில்லை. உதாரணமாக, இங்கே கணிதம் தெரிந்த ஒருவர் அந்த கணிதத்தை எந்தெந்த துறைகளில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற நடைமுறை வாழ்க்கையை விட்டுவிட்டு அதை மட்டுமே தனியாகப் பார்க்கிறர். அறிவியல் துறையில் இருக்கும் ஒருவருக்கு சமூக வரலாற்று தெரிவதில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால், குழப்பம் ஏற்படுகிறது. அது சமயத்தில் சண்டையாகவும் மாறிவிடுகிறது.

எந்தத் துறை சிறந்தது என்று பேசி சண்டையிட்டுக் கொள்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஆகவே, வாழ்க்கையை “ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்துடன்” பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையை, நம்மால் “முழுமையாக சேர்த்துப் பார்த்து” புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு ஒருங்கிணைத்துப் பார்த்தால்தான் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கான காரணத்தையும் புரிந்து கொண்டு அதற்கு சரியான விடையைக் கண்டடைய முடியும். இல்லை என்றால் யானையைப் பார்த்த அந்த மூன்றுபேர்பேல நாமும் ஆகிவிடுவோம் என எச்சரிக்கின்றனர் சமூக விஞ்ஞான அறிஞர்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்