நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோழி கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தி; கேரள கால்நடை மருத்துவரின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்

கேரளாவின் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜான் ஆபிரகாம்.
இவர் கோழி கழிவுகள் மற்றும் இறந்த பறவைகளில் இருந்து பயோடீசலை உருவாக்கி உள்ளார். நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2009-12-ம் ஆண்டு காலகட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுப்படிப்பின்போது இந்த ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார்.2014-ம் ஆண்டு இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்த அவர் இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்து இருந்தார். அதை ஆய்வு செய்த இந்திய காப்புரிமை அலுவலகம் தற்போது அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து காப்புரிமை வழங்கி இருக்கிறது.

சுமார் 7½ ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்குப்பின் இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கும் ஜான் ஆபிரகாம், இந்த டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபாடு மிகவும் குறையும் என தெரிவித்து உள்ளார். இவர் தயாரித்த ஒரு லிட்டர் பயோடீசல் 38 கி.மீ. வரை மைலேஜ் அளிப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய டீசல் விலையில் 40 சதவீத செலவிலேயே இந்த டீசலை வழங்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இவரது கண்டுபிடிப்பை கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அங்கீகரித்து தர சான்றிதழ் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்