நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புழுதி புயலை எட்டி பார்த்த விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம்

 சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பிரெஞ்சு விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம், அன்னை பூமியின் சக்தியை காட்டுகிறது.


பாரிஸ்: 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட பூமியின் சில படங்கள் பேசு பொருளாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கு ஆசியாவின் (பஹ்ரைன்) சில பகுதிகளில்  ஏற்பட்ட புழுதி புயல் (Sand Storm), விண்வெளியில் இருந்து படமெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் (French Astronaut Thomas Pesquet) இதனைபகிர்ந்துள்ளார். அவர் இந்த புகைப்படத்திற்கு கொடுத்துள்ள தலைப்பு - 'அன்னை பூமியின் அழகான படங்கள்.


'இதை இதற்கு முன் பார்த்ததில்லை'


தாமஸ் பெஸ்கெட் (Thomas Pesquet) ஒரு பிரெஞ்சு விண்வெளி பொறியாளர், பைலட் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஆவார், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். பெஸ்கெட் புகைப்படத்தை ட்வீட் செய்து, 'புழுதி புயல்! இதுபோன்ற எதையும் நான் விண்வெளி நிலையத்தில் இருந்து இதுவரை பார்த்ததில்லை, எவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது. எத்தனை டன் மணல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பறந்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. அன்னை பூமிக்கு இருக்கும் சக்தி  அற்புதமானது”


பதிவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்


தனது பிளிக்கர் பதிவில், தாமஸ் பெஸ்கெட் இதை கொஞ்சம் விரிவாக விளக்கியுள்ளார். 'பெருநகர பிரான்சின் தெருக்களில் கார்களில் மணல் குவிந்து கிடப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், இது ஒரு பருவகால நிகழ்வு. ஆப்பிரிக்காவுக்கு பறக்கும் ஒரு விமானியாக இது சில நேரங்களில் ஆபத்தானது என்பதையும் நான் அறிவேன், ஆனால் விண்வெளியில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை. இந்த புழுதி புயலில் எத்தனை டன் மணல் வீசியிருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள் '.


பெஸ்கெட் இதற்கு முன்பும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்


நவம்பர் 2016 முதல் ஜூன் 2017 வரை விமானப் பொறியாளராக தாமஸ் பெஸ்கெட் விண்வெளி சென்றார். மற்றொரு ஆறு மாத பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் படங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் விண்வெளி வீரர்களின், ஸ்பேஸ் வாக் ( Space Walk)  அடங்கும். மற்றொரு புகைப்படத்தில், அவர் சக விண்வெளி வீரர் அகிஹிடோவுடன் உயிர் காக்கும் கருவிகளை ஆய்வு செய்வதைக் காணலாம்.


ALSO READ : Germany: பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம், பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!