நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்புட்னிக் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது

கொரோனாவுக்கு எதிரான ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என தெரியவந்துள்ளது. ஆனாலும் அதன் தரவுகள் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன.
ரஷிய தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ரஷியாவில்தான் முதன் முதலாக தடுப்பூசி உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ரஷியாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம்தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசி ரஷியாவில் மட்டுமல்லாது தென்கொரியா, அர்ஜென்டினா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 69 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியைப் போலவே இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பாதிப்பு ஏற்படுத்தாததும், ஜலதோஷத்தை ஏற்படுத்தக்கூடியதுமான அடினோ வைரசை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் வெவ்வேறு வகை அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. 3 வார இடைவெளியில் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

91.6 சதவீதம் செயல்திறன்
இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் ‘தி லேன்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியாகின. பாதகமான எதிர்விளைவுகள், பக்க விளைவுகள் எதையும் தரவுகள் காட்டவில்லை. 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதம் என தெரிய வந்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் பைசர், மாடர்னா ஆகிய எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளுக்கு சமமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வைத்து பார்க்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் முறையே 95 மற்றும் 94.1 சதவீதம் ஆகும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இன்னும் ஐரோப்பிய மருந்துகள் முகமையோ, உலக சுகாதார அமைப்போ அங்கீகாரம் தரவில்லை. இதனால் இந்த தடுப்பூசியை கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துக்கு பயன்படுத்த முடியாது.

ரத்த உறைவு பிரச்சினை?
இந்த தடுப்பூசிக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் போட்டால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட அரிதான வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு இதற்கு உள்ளதா என்ற கேள்வி முக்கியமானது. அர்ஜென்டினாவில் 28 லட்சம் டோஸ் தடுப்பூசியை போட்டும் யாருக்கும் இந்த பிரச்சினை வந்தது இல்லை என்று கமலேயா கூறுகிறது. இந்த தடுப்பூசியால் ஒருவர்கூட அங்கு உயிரிழக்கவில்லை. அதே நேரத்தில் இந்த தடுப்பூசி பற்றிய நிஜ உலக தரவுகள் போதுமான அளவுக்கு வெளியிடப்பட வில்லை. வேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் போன்றவற்றுக்கு எதிராக இந்த தடுப்பூசி எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லை. ஆக கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்றபோதிலும் இவை பற்றிய தரவுகள் பற்றிய கேள்விகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த தகவல்கள் ஆஸ்திரேலியாவின் ‘தி கார்வர்சேஷன்’ இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்