நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கணினியின் வளர்ச்சி

மனிதனுக்கு உதவும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பவியல், பொறியியல், மருத்துவம், ராணுவம், வானியல் ஆராய்ச்சி என அனைத்து இடங்களிலும் கணினி தனது சேவையை செய்கிறது.
கணினியின் தேவை தற்போதைய காலங்களில் மிகவும் அதிகரித்து உள்ளது. அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், வங்கிகள், கல்லூரிகள், பள்ளிகள் என கணினி இல்லாத இடமே தற்போது இல்லை. மனிதனுக்கு உதவும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பவியல், பொறியியல், மருத்துவம், ராணுவம், வானியல் ஆராய்ச்சி என அனைத்து இடங்களிலும் கணினி தனது சேவையை செய்கிறது.

மனித சமூகம் தகவல்களை சேமிக்க தொடங்கிய நாள் முதலாக கணினியின் ஆதிக்கம் தொடங்கியது. சிறிய அளவில் தொடங்கிய கணினியின் வளர்ச்சி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்னதாக இருந்த கணினியைவிட தற்போது ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த கணினி நமது கைகளில் தவழ்கிறது.

வேளாண்மை துறையில் சென்ற ஆண்டின் வளர்ச்சி புதிய வேளாண் முயற்சிகள் போன்றவற்றை இணையத்தில் பகிரவும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட வேளாண் வளர்ச்சி மற்றும் தாக்கங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் கணினி பயன்படுத்தப்படுகிறது அரசு. தற்சமயம் கணினி வழியாக வேளாண் பாடங்களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கற்பிக்கிறது. கணினியின் உதவி கொண்டு வேளாண்மை வளர்ச்சி என்பது தற்போது தேசத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

மருத்துவத்துறையில் கணினியின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து கொண்டே உள்ளது எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற மருத்துவ வேலைகள் தற்போது கணினியின் உதவியுடன் மிக வேகமாக நடைபெறுகிறது. மருத்துவருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மருந்து உட்கொள்ளும் அவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மருந்துகளை பற்றிய விவரங்களை கணினி மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். புத்தம் புதிய வியாதிகள் வரும்போது அவற்றை எதிர்கொள்ளும் திறனை கணினி மற்றும் இணையம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிறது அரசு. 2019-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று பற்றிய ஆய்வுகளை உலக அளவில் தெரிய செய்தது இணையமே. இணையம் மூலமாகவே நோய்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசு அதிகம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் கணினியின் பங்கு இன்றியமையாததாக மாறிவிட்டது . இன்றைய காலகட்டங்களில் ராணுவத் தளவாடங்கள் அனைத்தும் கணினியின் புதிய ஏற்பாட்டில் இயங்குகின்றன . துல்லியமாக தாக்கும் காலங்களையும் அதிவேக ஆயுதங்களையும் கணினியின் உதவி கொண்டே இயக்கமுடியும்.

கணினியில் சக்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் இணைய வேகம் தொலைத்தொடர்பு மூலமாக நொடிப்பொழுதில் உலகை சுற்றி வரும் வல்லமை கொண்டதாக மாறி வருகிறது 10 ஆண்டுகளில் இணையத்தின் வேகம் 200 மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இனிவரும் காலங்களில் இது ஆயிரம் மடங்கு வேகமாக செயல்பட உள்ளது

இன்றைய சூழலில் கணினி இயக்க தெரியாத குழந்தைகளே நம் குடும்பங்களில் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. தொடுதிரை கொண்ட செல்போனை இயக்கும் இரண்டு வயது குழந்தைகளை நாம் இப்போது காணலாம். இத்தகைய வளர்ச்சி காட்டில் உள்ள கணினியை கற்காமல் இருப்பது தவறு என்னும் அளவிற்கு கணினியின் வளர்ச்சி உள்ளது. இருந்தபோதிலும் கணினி உதவியின்றி செய்யப்படும் செயல்கள் பல சமயங்களில் உன்னதமாக உள்ளன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்