நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வியாழன் துணைக்கோளில் ’நீராவி’- நாசா கண்டுபிடிப்பு

 வளிமண்டலத்தில் இருக்கும் கோள்களில் வியாழனின் துணைக்கோளான கேனிமீட் (Ganymede) மிகப்பெரியது. இந்த துணைக்கோளில் பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமாக இருக்கிறது.


வியாழனின் துணைக்கோளான கேனிமீட் சந்திரனில் நீர் ஆவியாதலை ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

வளிமண்டலத்தில் இருக்கும் கோள்களில் வியாழனின் துணைக்கோளான கேனிமீட் (Ganymede) மிகப்பெரியது. இந்த துணைக்கோளில் பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமான நீர் கேனிமீட் துணைக்கோளில் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

மேற்பரப்பில் திடமான பனிக்கட்டிகளாக இருக்கும் நீர், சுமார் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மையான பகுதிகள் பனிக்கட்டிகளாக இருப்பதால், ஆவியாதல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கருதிய நிலையில், தற்போது கேனிமீட் துணைக்கோளில் உள்ள நீர் ஆவியாவதை உறுதி செய்துள்ளனர்.


இதற்காக, 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக ஹப்பிள் தொலைநோக்கி கேனிமீட் துணைக்கோளை ஸ்பெக்ட்ரோகிராப் இமேஜிங் முறையில் எடுத்தனுப்பிய புகைப்படத்தை விஞ்ஞானிகள் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு ஆய்வுக்குட்படுத்தினர்.வெப்பநிலை மிகவும் குளிராக இருப்பதால் ஆவியாதல் நடைபெறாது என நினைத்திருந்த அவர்களின் எண்ணத்துக்கு மாறாக, இந்த முடிவுகள் இருந்தது.

அதாவது, பழைய புகைப்படத்தில் வாயுவின் கலர்ஃபுல் ஆரல்பேன்ட்ஸ் இருந்தது. இவை பூமியின் காந்தப்புலத்தில் இருக்கும் கலர்ஃபுல் ஆரல்பேண்ட்ஸை ஒத்திருந்தது. இன்னும் சில சமயங்களில் ஆரல்பேண்ட்ஸ் மாறிக்கொண்டே இருந்தது. இதற்கு காரணமாக, கேமீட்டின் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் அணுக்கள் இருக்கலாம் என நினைத்திருந்தனர்.

2018 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் கேன்மீடின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவை அளவிட முயன்றபோது, புற ஊதா ஒளியின் அலைநீளத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒற்றை ஆக்ஸிஜன் அணுக்கள் எதுவும் இல்லாததைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.

இதனையடுத்து ஸ்பெக்ட்ரல் படங்கள் மற்றும் ஹப்பிள் கைப்பற்றிய உயர் உணர்திறன் நிறமாலை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது, வியாழனின் துணைக்கோளான கேமீட்டில் நீர் இருப்பதை கண்டறிந்தனர். சூரிய ஒளி நேரடியாக கேமீட் மீது படும்போது ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை விட நீராவி அதிகளவில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

கேனிமீட்டில் நீராவி இருக்கும் ஆய்வில் பங்கேற்ற ஆய்வாளர்களில் ஒருவரான லோரென்ட்ஸ் ரோத் பேசும்போது, இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நீராவியானது சூடான பகுதிகளில் இருந்து பனிகட்டிகள் உருகும்போது ஏற்படும் ஆவி எனத் தெரிவித்தார். ஒரு நாளில் பல்வேறு வெப்பநிலைகள் கேனிமீட் துணைக்கோளில் பதிவாவதாக தெரிவித்த அவர், வேறுபட்ட வெப்பநிலைகள் இருப்பது இதன் மூலம் உறுதி செய்ய முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆய்வானது ஜூலை 26 ஆம் தேதி நேச்சர் ஆஸ்ட்ரோனமி என்ற விண்வெளி ஆய்வு இதழிலில் வெளியாகியுள்ளது.


ALSO READ : 58 லட்சத்துக்கு ஏலம் போன உலகின் மிகப் பழமையான ஃபுட்பால் ரூல் புத்தகம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!