நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருடப்பட்ட சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகிய கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா

 சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா .


இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப்படைப்புகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன.  

இந்திய கலைப்பொருட்களை திருப்பி தந்துவிடுவதாக ஆஸ்திரேலியாவின் தேசிய கேலரி (National Gallery of Australia)  வியாழக்கிழமையன்று அறிவித்தது அனைவரின் காதிலும் தேன் போல் இனிப்பான செய்தியாக வந்து விழுந்தது. 

மொத்தம் சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 14 கலைப்படைப்புகளை இந்தியாவுக்கு திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் குறைந்தது ஆறு திருடப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் ஒரு சுருள் ஆகியவை இதில் அடங்கும்.

சர்வதேச கடத்தல் மோசடியை நடத்தியதான குற்றச்சாட்டில் சிறையில் உள்ள மன்ஹாட்டன் கலைப்படைப்பு வியாபாரி சுபாஷ் கபூரிடமிருந்து பெறப்பட்ட 13 படைப்புகள் இந்த 14 படைப்புகளில் அடங்கும். மற்றொரு கலைப்படைப்பு நியூயார்க்கை தளமாகக் கொண்ட கலைப்படைப்பு வியாபாரி வில்லியம் வோல்ஃப் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது.

மொத்தம் சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த கலைப்பொருட்களில் ஆறு வெண்கல அல்லது கல் சிற்பங்கள், ஒரு பித்தளை சிலை, வர்ணம் பூசப்பட்ட சுருள் மற்றும் ஆறு புகைப்படங்கள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் உள்ளன.  

இவை அனைத்தும் 1989 மற்றும் 2009 க்கு இடையில் அருங்காட்சியகத்தால் கையகப்படுத்தப்பட்டவை. இவற்றில் சில சோழர் காலத்துக்கு முந்தையவை. இந்தியாவில் பல படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது திருடப்பட்டிருக்கலாம் என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை AFP இடம் தெரிவித்தஆஸ்திரேலிய தேசிய கேலரி இயக்குனர் நிக் மிட்செவிச், "இந்த பொருட்களை இந்திய மக்களிடம் திருப்பித் தர முடிவது என்பது நிம்மதியை கொடுக்கிறது" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தேசிய கேலரி சிறையில் உள்ள கபூரிடம் இருந்து பெற்றா பல படைப்புகளை திருப்பி அளித்துள்ளது, இதில் தமிழக ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட சிவ பெருமானின் வெண்கல சிலையும் அடங்கும், அதன் மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தேசிய கேலரியின் முடிவை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஹைகமிஷனர் மன்பிரீத் வோஹ்ரா, "ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளத்திற்கு இந்திய அரசு நன்றி கூறுகிறது" என்று தெரிவித்தார். கலைப்படைப்புகளை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிக் மிட்செவிச் கூறினார்.


ALSO READ : Astonishing Astronomer: நாசாவுக்காக 7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது இளம் வானியலாளர்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்