நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடிக்கடி_சிறுநீர்_வருவதை_போன்று #உணர்கிறீர்களா…அதற்கு_என்ன_காரணம்#தெரியுமா…

அடிக்கடி_சிறுநீர்_வருவதை_போன்று #உணர்கிறீர்களா…❓

அதற்கு_என்ன_காரணம்
#தெரியுமா…❓

🇵நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் #400_மி_லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும்.

எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும், இவ்வாறு தோன்றும் உணர்வுகள் இயல்பானது.

ஆனால், சிலருக்கு 400 மி.லி அளவை விட குறைவாக தேங்கி இருக்கும் போதே சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் தோன்றும்.

⭕ அடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்வதற்கு என்ன காரணம்❓

ஒருவரின் சிறுநீர்ப்பையில் 
200 அல்லது 300 மி.லி அளவு சிறுநீர் தேங்கும் போதே அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு உடல்நிலை தொடர்பான பிரச்னையின் ஆரம்பமாகும்.

👉இது போன்ற கட்டுப்பாடற்ற சிறுநீர் பிரச்சனைகளுக்கு, தனது சிறுநீர் பையில்…… 

⏩காசநோய் ,

⏩தொற்றுநோய், 

⏩புற்றுநோய்

⏩மன அழுத்தம் 

போன்ற பிரச்சனைகளின் காரணமாகக் 
கூட இருக்கலாம்.

ஆனால் இந்த நோய்களின் மூலம் எந்த காரணத்தால் சிறுநீர் அடிக்கடி வருகிறது என்பதை மட்டும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றார்கள்.

👉எனவே அடிக்கடி சிறுநீர் பிரச்சனைகள் ஏற்பட்டால்…… 

⏩காசநோய், 

⏩நீரிழிவுநோய், 

⏩புற்றுநோய் 

இது போன்ற நோய்களுக்கான பரிசோதனையை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

#_அடிக்கடி_சிறுநீர்கழித்தல்_தீர 

அடிக்கடி சிறுநீர்கழித்தலால் உடலுக்கு ஒரு களைப்புநிலை ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தின் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள் 
பெரிதும் பயன்படுகிறது.

💢 ஆவாரம்பூ - 30கிராம்

கடுக்காய் - 30 கிராம்

தென்னம்பூ - 30கிராம்

மாதுளம்பூ - 30கிராம்

கடுக்காய்பூ - 30 கிராம்

விரலிமஞ்சள் - 30 கிராம்

இவையனைத்தையும்தூள்செய்துவைத்துக்கொள்ளவும். இதில்காலை, மாலை, இரவு எனமூன்று வேளைக்கு 2 கிராம்வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர்கழித்தல் 
நீங்கும்.

💢 கருப்பு எள் - 5 கிராம்(1 ஸ்பூன்)

மஞ்சள் - 2கிராம்

பருத்திவிதைப் - 5கிராம்

பருப்பு

மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடிசிறுநீர் போதல் குணமாகும்.

💢 நல்லெண்ணெய் 10மி.லி அளவு 
எடுத்துக்கொண்டுஅதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள்சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் இறங்குதல்குணமாகும்.

💢 வாழைப்பூவுடன் 
சிறிதுமஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவுசாப்பிட அடிக்கடி சிறுநீர்கழித்தல் நீங்கும்.

💢 நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நன்னாரி வேரை
இடித்து நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும். 

நீர் பாதியாக வற்றியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் (இது நன்னாரி மணப்பாகு என்றழைக்கப்
படுகிறது), எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 

◀முக்கியமாக சொட்டு மூத்திரம், 

◀சிறுநீர் கழிக்க சிரமப்படுதல், 

◀சிறுநீர் கழிக்காததால் அடிவயிற்றில் ஏற்படும் வலி உள்ளிட்ட சிறுநீர் 

சம்பந்தப்பட்ட உபாதைகளை இந்த நன்னாரி பானம் சரிசெய்யும். 

💢 உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் நன்னாரி மணப்பாகை 15 முதல் 25 மில்லி வீதம் சில நாட்கள் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 5 கிராம் பச்சை நன்னாரி வேரை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.

மேலும், பொதுவாக நன்னாரி உடல் வியர்வையை கூட்டுவதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தக்கூடியது; 

தாராளமாக நீர் இறங்கச் செய்யக்கூடியது, 

ஆண் – பெண் உறுப்புகளில் வரக்கூடிய ரணத்துடன் கூடிய புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது நன்னாரி.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்