நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தங்கத்தில் ஜொலிக்கும் கழிவறை -பின்னணியில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வர் ஆன போலீஸ் அதிகாரி

கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவில் போக்குவரத்துக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு கழிவறை மற்றும் சில பொருட்கள் தங்கத்தினால் ஆனவை என்று கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பெறாத சரக்குகளை சோதனைச் சாவடிகள் வழியாக கொண்டு செல்வதற்கு ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவலர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாக வந்தப் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இவர்கள் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 1.9 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
சோதனை நடந்த அதிகாரியின் மாளிகைக்குள் படிக்கட்டுகள், அலமாரிகள், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்களில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்பு துறையினர் வீடியோவாக எடுத்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கைது செய்யப்பட்ட அதிகாரி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

ஐக்கிய ரஷியா கட்சியின் எம்பி அலெக்சாண்டர் டெலிகிராமில் இதுபற்றி கூறுகையில், ‘இதைப் போன்று 35 போக்குவரத்து காவலர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. கருப்பு சந்தையில் இது போன்று சரக்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறது’ என்றார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்