Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் திருமணம் நடைபெறும் போது, குறிப்பாக வட இந்தியாவில் மணமகனை குதிரையின் மேல் உட்கார வைத்து மணமேடைக்கு அழைத்து வருவது வழக்கம். திருமண நிகழ்ச்சி போது ஒரு குதிரை மணமகனுடன் நீண்ட தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்தால், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த நகைச்சுவையான காட்சியை பார்க்கும் உங்களுக்கு சிரிப்பு வந்தாலும், இதில் சிந்திக்க வேண்டிய விசியமும் உள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளை தொந்தரவு செய்யாமல், அது பயந்து ஓடும் அளவுக்கு சம்பவங்களை ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது நமது கடமை. திருமண நிகழ்ச்சி கொண்டாட்டம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விலங்குளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.
இந்தியாவில் திருமணம் நடைபெறும் போது, குறிப்பாக வட இந்தியாவில் மணமகனை குதிரையின் மேல் உட்கார வைத்து மணமேடைக்கு அழைத்து வருவது வழக்கம். சமீபத்தில், ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி போது ஒரு குதிரை (பெயர்: மாரே) மணமகனுடன் நீண்ட தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாலி கட்டுவதற்கு முன்னால் இப்படி ஒரு அம்பவம் நடைபெற்றதால், அனைவரும் வியப்படைந்தனர்.
ராம்புரா என்ற கிராமத்தில் திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்கள். குதிரையின் மேல் உட்கார்ந்து இருந்த மணமகன் மணமேடைக்கு செல்ல காத்திருந்தபோது, திடீரென்று சிலர் பட்டாசு வெடித்தார்கள். அதன் சத்தம் பயங்கரமாக இருந்தது. அதன்பிறகு நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.
ஆமா. பட்டாசு வெடி சத்தத்தைக் கேட்டு, கிளர்ச்சியடைந்த மாரே (குதிரை), அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தது. மணமகன் குதிரையின் மேல் உட்கார்ந்திருந்த நிலையில், வேகமாக ஒரே ஓட்டமாக ஓடியது. தற்போது இந்த திருமண வீடியோ (marriage viral video) பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.
வீடியோவை பாருங்கள்:
மாரே ஓடியதால், மணமகன் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் பலர் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை குதிரை ஓடியது. மணமகனை காப்பாற்ற, தங்கள் கார்கள் மற்றும் பைக்குகளுடன் குதிரையை பின்தொடர்ந்தது. இறுதியாக காப்பாற்றினார்கள். அதிர்ஷ்டவசமாக, மணமகனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக மீண்டும் திருமணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி (trending viral video) வருகிறது.
ALSO READ ; Viral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment