நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரெயில் அறிமுகம்

சீனாவில் விமான வேகத்திற்கும் கூடுதலான வேகத்துடன் பயணிக்கும் உலகின் அதிவேக ரெயில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சீனாவின் ரெயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் (சி.ஆர்.ஆர்.சி.) நிறுவனம் உலகின் அதிவேக ரெயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இதில், மேக்லெவ் ரெயிலை உருவாக்கி உள்ளது. 

இந்த ரெயில் குயிங்டோவ் நகரின் கிழக்கு கடலோர பகுதியில் வைத்து இயக்கப்பட்டது. இதன் வேகம் மணிக்கு 600 கிலோ மீட்டர் அல்லது 373 மைல் ஆகும். இந்த ரெயில்கள் 2 ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு ஜோடி, ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து விலக்கி ரெயிலை மேலே உயர்த்த உதவும்.

இந்த மேக்லெவ் ரெயிலானது பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரை 2.5 மணிநேரத்தில் கடந்து செல்லும். இதே தொலைவை அதிவேக ரெயிலானது கடந்து செல்ல 5.5 மணிநேரமும், விமானம் 3 மணிநேரமும் எடுத்து கொள்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்