சிறிய எழுத்து பிழைகளுடன் இருக்கும் அவரின் வேலை விண்ணப்பத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளதாக ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், 1973 ஆம் ஆண்டு வேலைக்காக கைப்பட எழுதிய விண்ணப்பத்தின் NFT வெர்சன் ஏலத்திற்கு வந்துள்ளது.
தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் சாதனைகளை செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், டீன் ஏஜ் பருவத்தில் வேலைக்காக அவர் கைப்பட எழுதிய விண்ணப்பம், அதனுடைய டிஜிட்டல் என்.எப்.டி வெர்சன் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஜாப் அப்பிளிக்கேஷன் என்ற வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏலத்தில் கைப்பட எழுதிய ஒரிஜினல் டாக்குமென்ட் மற்றும் என்.எப்.டி டிஜிட்டல் வெர்சன் என இரண்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. உலகிலேயே ஒருவரின் வேலை விண்ணப்பம் டிஜிட்டல் மற்றும் ஒரிஜினல் வெர்சனலில் ஏலத்திற்கு வந்திருப்பது இதுவே முதன் முறை எனக் கூறப்பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டு போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் (Reed College) படித்துக் கொண்டிருந்த அவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடியுள்ளார். முதன்முதலாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதியுள்ள வேலை விண்ணப்பத்தில் அவர் எந்தக் கம்பெனியில் சேர்ந்தார், எந்த பதவிக்கு விண்ணப்பித்தார் என்ற குறிப்புகள் இல்லை. சிறிய எழுத்து பிழைகளுடன் இருக்கும் அவரின் வேலை விண்ணப்பத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளதாக ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார். போன் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘எதுவும் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், சிறப்பு திறமைகள் பிரிவில் எலக்டிரானிக்ஸ் டெக்னீசியன் அல்லது டிஜிட்டல் டிசைன் என்ஜினியர் என கூறியுள்ளார்.
முதல் நிறுவனத்துக்குப் பிறகு வீடியோ கேம்களை உருவாக்கும் நிறுவனமான அட்டாரியில் டெக்னீசியனாக சேர்ந்த அவர், அங்கு ஸ்டீவ் வோஸினியாக்குடன் பணியாற்றினார். இதன் பின்னரே இருவரும் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினர். முதல் வேலையின்போது போன் இல்லை என குறிப்பிட்ட ஜாப்ஸ், பின்நாளில் உலகின் மிகச்சிறந்த ஆப்பிள் ஐபோனை உருவாக்கி வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தார்.
அவரின் வேலை விண்ணபத்தின் ஏலத்தை லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான ஆலி ஜோஸி ஒருங்கிணைத்துள்ளார். ஜூலை 28 ஆம் தேதியுடன் ஏலத்துக்கான தேதி நிறைவடைய உள்ளது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த ஏலத்தைக் கைப்பற்ற போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு charterfields என்ற தளத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1. 2 கோடிக்கு விற்பனையானது. அதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 1.6 கோடிக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை விண்ணப்பம் ஏலம் போனது. இம்முறை டிஜிட்டல் என்.எப்.டி வெர்சன் மற்றும் ஒரிஜினல் வெர்சன் என இரண்டும் ஒருசேர ஏலத்துக்கு வந்திருப்பதால் கூடுதல் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment