ஒரு உயிரினத்தில் ஏற்படும் பிறழ்வு என்பது அதன் டி.என்.ஏ வரிசையில் உண்டாகும் மாற்றத்தைக் குறிப்பதாகும்.
மேற்கு வங்க மாநிலம், பங்கான் மாவட்டத்தில் இரண்டு இடுப்புகள் மற்றும் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. ஒரு உயிரினத்தில் ஏற்படும் பிறழ்வு என்பது அதன் டி.என்.ஏ வரிசையில் உண்டாகும் மாற்றத்தைக் குறிப்பதாகும். இது, மனிதர்கள், விலங்குகள் அல்லது வேறு எந்த உயிரினத்திலும் ஏற்படலாம்.
மேற்கு வங்கத்தில், கடந்த வியாழக்கிழமை அன்று இதுபோன்ற பிறழ்வின் வெளிப்பாடாக ஒரு அசாதாரண நிகழ்வு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தின் மாவட்டமான பங்கானில், வடக்கு 24 பர்கானாவில் இரண்டு இடுப்பு மற்றும் எட்டு கால்கள் கொண்ட ஒரு ஆடு பிறந்தது.
கல்மேகா பகுதியில், இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் சரஸ்வதி மொண்டல் என்பவர், ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை அன்று, அவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. பிறந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒரு குட்டி சாதாரண உருவத்தில், ஆரோக்கியமாக இருந்தது. மற்றொரு குட்டி, இரண்டு இடுப்பு மற்றும் 8 கால்களுடன் பிறந்தது. விநோதமாகக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில நொடிகளிலேயே இறந்தது மிகவும் பரிதாபகரமானது.
இந்த ஆட்டுக்குட்டி பற்றிய செய்தி கிராமம் முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் வினோதமான அந்த ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதற்காக உடனேயே சரஸ்வதியின் வீட்டுக்கு விரைந்தனர். இதுபோன்ற ஒரு ஆட்டுக்குட்டியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று சரஸ்வதி கூறியதாக செய்திகள் தெரிவித்தன.
ஆட்டுக்குட்டியின் மரணம் குறித்த தகவல்களையும் வழங்கினார். தாய் ஆடும், மற்றொரு குட்டியும் முற்றிலும் நலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரபணு பிறழ்வால் ஏற்படும் வித்தியாசமான பிறப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
இதேபோன்ற ஒரு விநோதமாக பிறப்பு, சில மாதங்களுக்கு முன்பு குஜராத்திலும் பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், மனிதனைப் போன்ற முகத்துடன் ஒரு ஆடு பிறந்தது. அந்தப்பகுதி மக்கள் அதை அடக்கம் செய்வதற்கு முன்பு அதை வணங்கினர். இது தங்கள் முன்னோர்களின் மறுபிறவி என்று கிராமவாசிகள் உறுதியாக நம்பினார்கள்.
குஜராத், சோங்காத் தாலுகாவில் தபதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செல்டிபாடா என்ற கிராமம் தான், மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட அந்த ஆடு பிறந்த இடம். அந்த ஆட்டுக்குட்டி மிகவும் விநோதமாகக் காணப்பட்டது.
அந்த ஆட்டுக்குட்டி, சாதாரண ஆடுகளுக்கு இருப்பது போன்ற காதுகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால், அதன் உடல், கண்கள், வாயின் மேற்பகுதி மற்றும் சில பகுதிகள் மனிதர்களைப் போன்ற இருந்தது. மனிதனைப் போல காணப்பட்ட ஆட்டுக்குட்டியும் 10 நிமிடங்களுக்குள் இறந்து விட்டது.
Comments
Post a Comment