நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுலபமான வழிகள்

 அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பெரும்பாலனவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாய் மாறிவிட்டது. அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.


அதிலும் இந்தியாவில் வசிக்கும் ஆறில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. இந்த நோய் பல துணை நோய்களையும் அழையா விருந்தாளியாக கொண்டுவந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுதான் இந்த நோயை பார்த்து அனைவரும் அதிக அச்சம் கொள்வதற்கான காரணம்.


நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு  கொரோனா தொற்று போன்ற வைரஸ் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதை கட்டுப்படுத்த சுலபமான ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன.  


துளசியும் வேப்பிலையும் நீரிழிவை நெருங்கவிடாது. 10 வேப்பங்கொழுந்து இலைகளையும், 10 துளசி இலைகளை அரைத்து அதன் சாற்றை குடித்து  வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.


பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய் என்பது தெரியும். நீரிழிவு நோய்க்கும் பாகற்காய் கசக்குமாம்… சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலை சுத்திகரிக்கவும் பாகற்காய் சாறு சிறந்தது. 


கடுக்காய், தன்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் கலந்து செய்யப்படும் அருமருந்து திரிபலா. தினமும் 1 தேக்கரண்டி அளவு திரிபலா பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். 

20 கிராம் அளவு ஆலமரப்பட்டையை 4 கப்  நீரில் கொதிக்கவிடவேண்டும். அது 1 கப் அளவு சுண்டியபிறகு வடிகட்டி குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். அதேபோல், 3 தேக்கரண்டி லவங்கப் பொடியை 1 லிட்டர்  நீரில் கொதிக்க விட்டு வடிகட்டிக் குடித்து வந்தால்  சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.  


நெல்லிக்காய் அனைவருக்கும் அருமருந்தான காய். தினமும் 20 மில்லி லிட்டர் நெல்லிச்சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்துவிட்டு, அடுத்த நாள் அதை  அரைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரை நோய் அண்டாது.  . 


மஞ்சளில் உள்ள குர்குமின், இன்சுலின் சுரப்புச் செல்கள் சேதமடைவதைக் கட்டுப்படுத்தி, உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். 


உணவே மருந்து என்பதை உரக்கச் சொல்லுங்கள், மருந்தையே உணவாக்காமல், வீட்டிலுள்ள மளிகைப் பொருட்களைக் கொண்டே நோய் பரமரிப்பை செய்வது தான் என்றென்றும் நல்லது.


ALSO READ :சளி இருமலைப் போக்கும் செலவு ரசம்; செய்வது எப்படி தெரியுமா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்