நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி சாப்பிடலாமா? அதனால் ஏற்படும் அபாயம் என்ன?

 குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்து பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? அது உடலுக்கு ஆரோக்கியமானதா? தெரிந்துக்கொள்ளுங்கள். 


மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அடிக்கடி வெளியில் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் தேவையான பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்துவிட்டால் சில நாட்களுக்கு அதை பயன்படுத்தலாம். 


ஆனால் குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? குளிர்சாதன பெட்டியில் இருக்கும் குளிரூட்டப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியமானதா? அதுவும் குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் இருக்கும் இறைச்சியை சாப்பிடலாமா? நீண்ட நாள் குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருப்பது மூலம் ஏற்படும் தீமைகள் (Meat Side Effects) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 


குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் சில உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் (Deep Freezer) வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும். அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பையில் நோய் உங்களை தாக்கலாம்.


குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். அதே நேரத்தில், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.


இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம். இது தவிர, பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.


சமைக்காத இறைச்சியை (Raw meat) ஒருபோதும் ஒரு நாளை அல்லது இரண்டு நாளைக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆனால் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் அது சூடாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது. 



ALSO READ : சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுலபமான வழிகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!