நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்

 வைரலாகும்  இந்த வீடியோவில் மணப்பெண்ணின் திருமண ஆடையில் 100 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது...


பொன்னை பிடிக்காத பெண்களே இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பொன்னாலான ஆடை போடுவது என்பது யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகையே ஆடம்பரம் என்னும் நிலையில், பொன்னாடையை பற்றி யார் தான் நினைத்துப் பார்ப்பார்கள்?

வேண்டுமானால் அரசியல்வாதிகள் சால்வையை போற்றி பொன்னாடை என்று சொல்வார்களே அப்படித்தான் பொன்னிற ஆடையை வாங்கி திருப்திபட்டுக் கொள்ளலாம்.

ஆனால், மாத்தி யோசி என்பதே இன்றைய டிரெண்டாக இருக்கும் காலகட்டம் இது. ஆசையும், பணமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான உதாரணமாக இந்த  திருமணம் உள்ளது. மணப்பெண்ணின் திருமண ஆடையில் 100 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்!


சிவப்பு நிற திருமண ஆடையில் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்துவதையே மறந்து மண ஆடையையே பார்த்து பிரம்மித்து நின்றுவிட்டார்களாம்… சும்மாவா என்ன? 100 கிலோ தங்கத்தை அணிந்திருந்தால் பெண்ணை விட பொன்னுக்கு தானே மவுசு அதிகம்.

திருமண லெங்கா மிக நீளமாகவும் பிரமாண்டமாகவும் இருந்ததால் திருமண மேடையை முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது. மணப்பெண்ணின் பாவாடை, விழா மேடையின் படிக்கட்டுகளையும் தாண்டி கீழே சென்றது.

திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவது இயற்கை தான். ஒருவரின் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும், எனவே தம்பதிகள் தங்கள் திருமண உடை நேர்த்தியானதாகவும் பார்ப்பவர் மனதை கவர்வதாகவு இருக்க பல முயற்சிகளை செய்கின்றனர். இது பாகிஸ்தான் மணமகளின் விருப்பம்…  

இது திருமண சீசன் என்பதால், மணமகன் மற்றும் மணமகளின் பல வீடியோக்கள் தினசரி அடிப்படையில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் மணமகளின் இந்த 100 கிலோ ஆடை வீடியோ பழையது என்றாலும், ஆச்சரியப்படவைப்பதால் மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது. 

மணமகளின் ஆடையில் கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. நூல் இழைகளுக்கு பதிலாக தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆடைக்கு பொருத்தமாக, மணமகள் விலையுயர்ந்த ஆபரணங்களையும் அணிந்து ஜொலிக்கிறார்.

மணமகன் மட்டும் சளைத்தவரா என்ன? அவருடைய ஆடையும் தங்கத்தால் செய்யப்பட்ட ஷெர்வானி அணிந்திருந்தார். கடந்த வருடமே இந்த வீடியோ வைரலானது. ஆனால், சிலர் மணப்பெண்ணை ட்ரோல் செய்தனர். இவ்வளவு நீள ஆடையை எப்படி அணிந்தார் மணப்பெண் என்றும் பலர் ஆச்சரியப்பட்டார்கள்.

திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருமே இந்த அதிசய ஆடையை பற்றி ஆச்சரியப்பட்டாலும், பெண்கள் திறந்த வாயை மூடாமல் ரசித்தார்களாம். அதன்பிறகு அவர்களது கருத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  திருமணத்திலிருந்து கசிந்த சில வீடியோக்களில் அங்கு கூடியிருந்தவர்கள் வியப்புடன் பேசிக் கொள்வது தெரிகிறது.

100 கிலோ தங்கத்தால் ஆன ஆடையை நீங்கள் பார்த்து ரசியுங்கள்,  



ALSO READ : ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!