நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ராட்சத விண்கல் பூமியை நொடிக்கு 8 கி.மீ. வேகத்தில் நெருங்குகிறது.
ராட்சத அளவிலான விண்கல் ஒன்று, ஐரோப்பாவில் ஜூலை 24, சனிக்கிழமை, அன்று பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்திய நேரப்படி, ஜூலை 25, ஞாயிறு அன்று இந்த நிகழ்வு ஏற்படும்.
மிகப்பெரிய அளவு விண்கல் ஒன்று, பூமியை நோக்கி வருகிறது என்றும், அது மிகவும் ஆபத்தானது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜூலை 24, 2021 அன்று, அந்த விண்கல் பூமியைக் கடந்து செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்த ராட்சத விண்கல் பூமியை நொடிக்கு 8 கிமீ வேகத்தில் நெருங்குகிறது என்றும், மணிக்கு 28,800 கிமீ வேகத்தில் பயணிக்கிறது என்றும் அறியப்படுகிறது. அதிவேகமாக பூமியை நோக்கி வரும் இந்த விண்கல், தன்னுடைய பாதையில் எது இடையூறாக இருந்தாலும் அழித்து விடும்.
NEO-நியர் எர்த் ஆப்ஜக்ட் வெளியிட்டுள்ள அறிக்கை இந்த விண்கல் 20 மீட்டர் அகலமும், 28,70,847,607 கிமீ தொலைவில் இருந்து பார்வைக்கு புலனாகும் என்று தெரிவிக்கின்றது. இந்த தொலைவு, நிலவுக்கும், பூமிக்கும் இடையில் இருக்கும் மொத்த தொலைவின் 8 மடங்கு என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ராட்சத விண்கல் பூமி மீது மோதுமா?
ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள விண்கல் என்று இந்த ராட்சத விண்கல்லை விஞ்ஞானிகள் வகைப்படுத்தி இருந்தாலும், பூமியை நோக்கி வந்தாலும், பூமிக்கு இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்றும், பூமியின் மீது மோதுவதற்கு சாத்தியங்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறுகின்றனர். அபோலோ என்ற ஆர்பிட் வழியே இந்த விண்கல் ஜூலை 24 மற்றும் 25, இரவு நேரத்தில் கடந்து செல்லலாம் என்று கூறப்படுகிறது.
2008 GO20 விண்கல் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்த ராட்சத விண்கல்லின் பெயர் 2008 GO20. 2008 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் தேதியன்று இந்த விண்கல் பூமியைக் கடந்து சென்றுள்ளது. இந்த நியர்-எர்த் விண்கல், 220 மீட்டர் அகலம் கொண்டது. மேலும், ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விடப் பெரியது. பூமியை வினாடிக்கு 8.2 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நமது பூமியிலிருந்து சுமார் 3-4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான இருக்கும் தூரத்தில் கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது மடங்கு தொலைவு ஆகும்.
2008 GO20 விண்கல் எப்போது பூமியைக் கடந்து செல்லும்?
ஐரோப்பாவில் ஜூலை 24, 2021, சனிக்கிழமை அன்று, அந்த விண்கல் பூமியைக் கடந்து செல்லலாம். இந்திய நேரப்படி, ஜூலை 25, ஞாயிறு அன்று இந்த நிகழ்வு ஏற்படும்.
Comments
Post a Comment