நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெப்பத்தை சமாளிக்க துபாயில் போலி மழை! Fake Rain என்றால் என்ன?

 துபாயில் உருவாக்கப்பட்ட போலி மழையின் வீடியோவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.


துபாயில் மழை பெய்தது… இது சாதாரணமான விஷயம் தானே? இதில் என்ன இருக்கிறது என்ற கேளி எழுகிறதா? இது தானாக வந்த மழையில்லை, உருவாக்கப்பட்ட போலி மழை… இந்த போலி மழையின் வீடியோவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.


துபாயில் கோடைகாலம் மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு கட்டத்தில் அங்கு வெப்பநிலை 50C ஐ தாண்டியது. வெப்பத்தைத் தணிக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையம் எடுத்த முடிவு தான் போலி மழை. போலி மழை ஏற்படுத்திய நீர் துபாயின் தெருக்களிலும், சந்துகளிலும், வீதிகளிலும் ஆறாய் பாயந்தது, வெப்பத்தைக் குறைத்தது.


மேக விதைப்பு எனப்படும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மழை உருவாக்கப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. புதுமையான தொழில்நுட்பம் மேகங்களில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் மழையை வரவைக்கிறது.  


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் மழை பெய்யும் வீடியோ பகிரப்பட்டது. கார்கள் அணிவகுத்துச் செல்லும் வீதிகளில் மழை பொழிவதை அந்த வீடியோ காட்டுகிறது. 

WATCH VIDEO


மழை பொய்க்கும் சமயங்களில் மேக விதைப்பு (Cloud seeding) முறையில் செயற்கையாக மழையை உருவாக்குவதுதான் செயற்கை மழையாகும். பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேலே நோக்கிச் செல்லும் போது குளிர்ந்து மேகமாக மாறுகிறது.


குறிப்பிட்ட பருவ காலங்களில் ஏற்படும் குளிர்ந்த காற்றின் மூலம் மேகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகள், நீர்த்திவலைகளாக மாறி மழை பொழிகிறது. இந்த நீர்க்கூறுகள் அதிக குளிர்ச்சியடைந்தால், மேகத்தில் உள்ள ஈரப்பதம் நீராக மாறாது. அப்போது மேகங்கள் இருந்தும் மழை பெய்யாமல் சென்றுவிடும்.  


அப்போது, சிறிய விமானம் அல்லது ட்ரோன்கள் மூலம் பொட்டாசியம் அயோடைடு, சில்வர் அயோடைடு, கார்பன் டை ஆக்சைடு போன்றாவை மேகங்களின் மீது தூவப்படும். இவை ஈரப்பதத்தைச் சரி செய்து மழையைத் தருவிக்கும்.  


40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறையை பயன்படுத்தி செயற்கையாக மழை பெய்விக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வீதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.  இந்தியாவிலும் மழை பொய்க்கும் காலத்தில் விவசாயத்திற்காக செயற்கை மழை பெய்விக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ALSO READ : நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது…

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்