நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே நேரத்தில் எலிகளை விழுங்கும் இரட்டை தலை பாம்பு - வைரலாகும் வீடியோ

 இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


இரண்டு தலைகளை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும்  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.

பாம்பு.. என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் தானாக பயம் தொற்றிக்கொள்ளும். இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் நிறைய வெளியாகின்றன. பாம்புகள் மீதான பயம் இருந்தாலும் இணையத்தில் அவை தொடர்பான வீடியோக்கள் அதிகம் பார்வையாளர்களை ஈர்க்கின்றனர். சிலருக்கு பயம் இருந்தாலும் பாம்புகள் குறித்து அறிந்துக்கொள்ள ஆர்வம் இருக்கும்.



இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு தலைகள் கொண்ட அந்த பாம்பு இரண்டு தவலைகளை உண்ணுகின்றன. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நபர்.. ஜெர்ரி மற்றும் பென் இரண்டு எலிகளை உண்ணுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இரட்டையர்களை போலவே இரண்டு தலைகள் கொண்ட பாம்புகளும் உள்ளன. இவை பிறக்கும்போதே மரபணு குறைபாடுகளால் பிறக்கின்றன. பொதுவாக இத்தகைய பாம்புகள் நீண்ட நாள்கள் வாழ்வது இல்லை. அவை கவனமாக பராமரிக்கப்படுவதால் ஜெர்ரி மற்றும் பென் நன்கு வளர்ந்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்