நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Fastest Electric cars: உலகின் அதிவேக மின்சார கார்கள்......

 எலக்ட்ரிக் வாகனங்கள் பல விதங்களிலும் மேலானவை. அதிவேகத்தில் செல்லும் மின்சார கார்களே எதிர்கால உலகில் ஆட்சி செய்யும்.  டெஸ்லா நிறுவனம் தான் உலகெங்கிலும் மின்சார கார்களை பிரபலப்படுத்திய பெருமைக்குரியது.


டெஸ்லாவைத் தவிர பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களது சொந்த எலக்ட்ரிக் வாகனங்களுடன் களம் இறங்கியுள்ளனர். மின்சார வாகனங்களுக்கான சந்தை வளர்ச்சியடைகிறது என்பதை இது காட்டுகிறது. அவை வேகமாக இயங்கும் ஸ்போர்ட்ஸ்கார்களை விட துரிதமாக இயங்கும். உலகின் மிக விரைவான மின்சார கார்களின் பட்டியல்...

Also Read | ஜூலை மாதம் வெளியான 5 சிறந்த Cars, விலை மற்றும் அம்சங்களைக் இங்கே காண்க.


ஆடியின் அதிவேக மின்சார கார், போர்ஷே டெய்கன் டர்போ எஸ் உடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் 2300 கிலோவிற்கு மேல் எடையுள்ள கார் இதுவாகும். முடுக்கம் 0-100 கிமீ / மணி: 3 வினாடிகள் அதிக வேகம்: மணிக்கு 250 கி.மீ. 


Porsche பிராண்டின் டெய்கன் டர்போ எஸ், ஒரு செயல்திறன் நிறைந்த செடான் வாகனம். ஜெர்மன் வாகன உற்பத்தியாளரிடமிருந்து வரும் முதன்மையான மின்னணு வாகனம் வேகமானது மட்டுமல்ல, விசாலமானது. அதன் அதிநவீன சார்ஜிங் தொழில்நுட்பத்தால், வெறும் 5 நிமிட சார்ஜிங்கில் 100 கி.மீ தூரம் பயணிக்கலாம். முடுக்கம் 0-100 கிமீ / மணி: 2.8 வினாடிகள் அதிக வேகம்: மணிக்கு 260 கி.மீ. 


பிரிட்டிஷ் வாகன தயாரிப்பு நிறுவனமான லோட்டஸின் தயாரிப்பு எவிஜா. எவிஜாவின் வரையறுக்கப்பட்ட பதிப்பு எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்கார் ஆகும். 130 எவிஜா கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும், இது "வகை 130" என்ற குறியீட்டு பெயருடன் வெளியாகும். முடுக்கம் 0-100 கிமீ / மணி: 3 வினாடிகள் அதிக வேகம்: மணிக்கு 320 கி.மீ. 


மாடல் எஸ் பிளேட் மிக நீண்ட தூரத்திற்கு செல்லக்கூடியது. உலகெங்கிலும் உற்பத்தியில் உள்ள அனைத்து மின்சார வாகனங்களிடையே விரைவான முடுக்கத்தையும் கொண்டுள்ளது என்று அமெரிக்க ஈ.வி. தயாரிப்பாளர் டெஸ்லா கூறுகிறது. மாடல் எஸ் பிளேட் ஒரு ட்ரை மோட்டார் ஆல் வீல் டிரைவ் கொண்டது.   முடுக்கம் 0-100 கிமீ / மணி: 2.1 வினாடிகள் அதிக வேகம்: மணிக்கு 322 கி.மீ. 


சீன வாகன உற்பத்தியாளர் நியோ தனது ஈபி 9 கார்களை "உலகின் அதிவேக மின்சார கார்களில் ஒன்று" என்று வரையறுக்கிறது. இந்த கார் ஜெர்மனியில் உள்ள நர்பர்க்ரிங் பாதையின் வேக சாதனையையும் கொண்டுள்ளது. ஈபி என்பது சோதனை முன்மாதிரியைக் குறிக்கிறது. நியோ குறைந்தது 13 ஈபி 9 களை விற்றுள்ளது. முடுக்கம் 0-100 கிமீ / மணி: 1.9 வினாடிகள் அதிக வேகம்: மணிக்கு 350 கி.மீ. 



ALSO READ : குழந்தைகளுக்கு பாதுகாப்பான தளமாக மாற்ற Netflix அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!