நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூர்ய நமஸ்காரம் செய்யும் கடற்சிங்கம்... இந்திய வனத்துறை அதிகாரி வெளியிட்ட அழகிய புகைப்படம் வைரல்

 இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து கேப்சனில் சூரிய நமஸ்கார் என குறிப்பிட்டுள்ளார்.


சூரிய நமஸ்காரம் (சூரிய நமஸ்காரா) அல்லது சூரிய வணக்கமுறை (இலக்கியத்தில் "சூரியனுக்கு வணக்கம்") என்பது யோகசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். நவீன யோகா பராம்பரியத்தின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புபவர்கள் இதை சூரிய உதயத்தில் செய்வதற்கு ஆயத்தமாவர்.


ஒரு நாளில் மிகவும் 'ஆன்ம ரீதியாக உகந்த' நேரமாக இந்நேரத்தை பழமை விரும்பிகள் கருதுகின்றனர். பெரும்பாலும் காலை நேரத்தை பலர் சூரிய நமஸ்காரம் செய்து தொடங்குவர். அவ்வகையில் இன்றைய காலை பொழுதை கடற்சிங்கம் ஒன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆரம்பிக்கின்றது. இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து கேப்சனில் சூரிய நமஸ்கார் என குறிப்பிட்டுள்ளார்.
கடற்சிங்கம் (Sea lion) என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடற்சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகள் ஆகியன கடற்சிங்கத்தின் முக்கிய இரைகளாகும்.
கடற்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.

ஆண் கடற்சிங்கத்தின் அதிகபட்ச எடை 300 கிலோ கிராமும் நீளம் 8 அடியும் ஆகும். பெண் கடற்சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராமும், நீளம் 6 அடியும் ஆகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாக உள்ளது. கடற்சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!