நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்

 பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் Oil Skin என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானதாகும்.

ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.

இதனால் ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்பிரச்சினையால் பெரிதும் பாதிப்படைகின்றார்கள்.

எனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். தற்போது அவை எப்படி என பார்ப்போம். 


சுடுநீர் சருமத்தை வறட்சி அடையச் செய்யும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எப்போதும் தங்கள் முகத்தை சுடுநீரில் தான் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கலாம். 


தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு முகத்தைத் தேய்க்கலாம் அல்லது தக்காளியை அரைத்து தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடலாம். இதனால் நல்ல தீர்வு கிடைக்கும்.


சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை குறைக்க, லாவெண்டர் எண்ணெயை பஞ்சில் நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதைத் தடுக்கலாம்.


 தினமும் வெள்ளரிக்காயைக் கொண்டு முகத்தை தேய்த்து மசாஜ் செய்யுங்கள். வேண்டுமானால் வெள்ளரிக்காய் சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.


  ஓட்ஸ் பொடியை வேப்பிலை சேர்த்து காய்ச்சிய தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படுத்தப்படுவதோடு, வேப்பிலை தண்ணீர் சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.


முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.


 பால் ஒரு சிறப்பான கிளின்சர். எனவே தினமும் பஞ்சில் பாலை நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.


எலுமிச்சை சாற்றில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். 


  கற்றாழை ஜெல்லில், சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வருவது நல்லது.


 தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தை அழகாக பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். 


 ஒரு ஃபேஸ் பேக் போடும் போதும், அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, இறந்த செல்களும் நீங்கும். 


ஒரு பௌலில் க்ளே, தேன், கடலை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்



ALSO READ : உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? முல்தானி மெட்டியுடன் இந்த பொருட்களை சேர்த்து பயன்படுத்தி பாருங்க....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!