நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு லிட்டர் தேள் விஷம் 80 கோடி ரூபாய் - எங்கே?

 ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்.


தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். சினிமாவிலும் மற்ற கலைகளிலும் தேள் என்றால் எதிர்மறையான பயங்கரமான ஒரு நச்சு உயிராகவே காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த தேள், பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்.

துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தான் இந்த பணி நடைபெற்று வருகிறது. ஒரு நாளுக்கு 2 கிராம் மட்டுமே நஞ்சு எடுக்கப்படுகிறது.


தேள் நஞ்சு எப்படித் தயாரிக்கப்படுகிறது

தினமும் தேளை பெட்டியிலிருந்து எடுத்து அது ஒரு துளி நஞ்சை வெளியிடும் வரை காத்திருந்து அதனை ஆய்வாளர்கள் சேகரிக்கின்றனர்.

ஒரு தேளை இடுக்கி போன்ற கருவியால் பிடித்துக்கொண்டு மற்றொரு கருவியால் அதன் கொடுக்கை அழுத்தி நஞ்சு சேகரிக்கப்படுகிறது.

பின்னர் அதனை உறைய வைத்து, அரைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.

"எங்களிடம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேள்கள் இப்போது இருக்கின்றன. அவற்றுக்கு முறையாக உணவளித்து பராமரித்து வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு நஞ்சு கிடைக்கிறது.

கிடைக்கும் நஞ்சை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்கிறோம்." என்கிறார் தேள் பண்ணை உரிமையாளர் மெடின் ஓரன்லர்.


தேள் நஞ்சின் பயன்கள்

நோய் எதிர்ப்பு மருந்துகள்

அழகு சாதனப் பொருட்கள்

வலி நிவாரணிகள் போன்றவற்றை உருவாக்க தேள் நஞ்சு பயன்படுகிறது. மூளைக்கட்டி (Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது.

ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு இருக்கிறது. 300, 400 தேள்களில் இருந்து ஒரு கிராம் நஞ்சு கிடைக்கிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!