நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்...

வாழ்க்கை என்பது சிலருக்கு போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைவதின் காரணம் வெற்றி. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். “தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று பொருள்” என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.
தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி

“முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை

முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை

முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை”

அயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து 6 முறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்தி பூச்சி ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றிற்கு தாவித்தாவி வலை பின்னியது. 6 முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதை பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்தார். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார்.

தடை அல்ல
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் சில முறை தோற்றார். தன்னம்பிக்ைகயோடு மீண்டும் போட்டியிட்டு அமெரிக்க அதிபர் ஆனார். நிற வேறுபாடுகளை நீக்கி உலகப்புகழ் ெபற்றார். விறகு வெட்டியின் மகனாக பிறந்த ஆபிரகாம் வெற்றிக்கு ஏழ்மையோ தோல்வியோ தடை அல்ல என்பதை நிரூபித்தார்.படிப்பில் மிகவும் மந்தமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார் என்றால் அவரது தன்னம்பிக்கையும் முயற்சியும் செயல் திறனுமே காரணம்.

அகிம்சை வழியில்...
மகாத்மா காந்தி இளைஞராக இருந்தபோது லண்டனில் பார்அட்லா படித்தார். இந்தியா வந்த பிறகு முதல் வழக்கை மும்பையில் நடத்தினார். நீதிமன்றத்தில் பேசவே முடியாமல் தவித்தார். இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் அவர் தென்னாப்பிரிக்கா சென்று இனவேறுபாட்டை நீக்க பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார். இந்தியா திரும்பியதும் அகிம்சை வழியில் இந்திய விடுதலை போராட்டத்தை நடத்தினார். இந்தியாவில் விடுதலை மலர்ந்தது. ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து பள்ளி படிப்பையே முடிக்காமல் விட்ட காமராஜர் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றார். முதல்-அமைச்சர் ஆனார். படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.

தன்னம்பிக்கை
கணவனை இழந்த ராணி மங்கம்மாள் மதுரை அரசியானார். பதினெட்டு ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். அவர் போட்ட சாலைகள் மங்கம்மா சாலை என்று தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் உள்ளது.

இவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர் பலர். “யானைக்கு பலம் தும்பிக்கையில், மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கையில்” என்பதை மறவாதீர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்