நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் ஒரு வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள்

பலருக்கும் பிடித்த உணவாக உள்ள முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.

அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.

மூளை திறன்

தினமும் வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் நமது மூளை வேகமாக செயல்படும். படிக்கும் மாணவர்களுக்கு வேக வைத்த முட்டை சாப்பிட கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

கல்லீரல்

உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீக்கிரத்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்றினாலே கல்லீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

கர்ப்பம்

வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க வாய்ப்பு அதிகம்.

உடல் எடை

எவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவில்லையா? உங்களின் இந்த பிரச்சினையை தீர்க்க வேகவைத்த முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்