நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒலிம்பிக் போட்டியின் வரலாறு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவலுக்கு இடையே கடும் பாதுகாப்புடன் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டியின் வரலாறு குறித்து இங்கு காண்போம்...
கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியை சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது. இந்த போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைத்தவர், பியரி டி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப் படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான்.

முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 1924-ம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் முந்தைய ஒலிம்பிக் போட்டியானது, ‘கோடைகால ஒலிம்பிக் போட்டி’ என்று சொல்லப்பட்டது. 1992-ம் ஆண்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில்தான் நடத்தப் பட்டன. அதன்பிறகான காலங்களில், 2 ஆண்டு இடைவெளியில் இரண்டு போட்டிகளும் மாற்றியமைக்கப்பட்டன. அதாவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்.

இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது. வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி வரை இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில், உலக போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடை முறையில் உள்ளது. ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும். பின்னர் பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஒலிம்பிக் கொடியில் மொத்தம் 6 வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாக கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும் இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்த கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23-ந் தேதியை, ‘உலக ஒலிம்பிக் தினம்’ என்று அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!