நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குழந்தைகளும்.. விளையாட்டும்..

கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்கள் மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு விரும்புகிறார்கள். பெற்றோர் தங்களுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும். அவர்களுடன் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகி விடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான 
உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். அவை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.

ஹூலா ஹூப்ஸ்: இந்த விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் அல்லது நடன பயிற்சி அளிக்க விரும்பினால் இந்த பயிற்சி சிறந்தது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

பேட்மிண்டன்: வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். கணினியிலோ, செல்போனிலோ, டி.வி.யிலோ மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மாறுதலை ஏற்படுத்திக்கொடுக்கும்.

ஸ்கேட்டிங்: சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம். ஏனெனில் இது ஜாக்கிங் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுமோ அதைவிட அதிகமாகவே உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

சைக்கிள் ஓட்டுதல்: எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும்.

இதுபோன்ற குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண் டும். உறவையும் வலுப்படுத்தும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்