நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆச்சரியப்பட வைக்கும் அரிய வகை மாம்பழம்

மியாசாகி என்னும் மாம்பழ ரகம் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு சர்வதேச சந்தையில் விற்கப்படுவதாக வெளியான தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ரக மாம்பழத்தை விளைவிக்கும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தம்பதியர், மா மரங்களை பாதுகாப்பதற்கு 6 நாய்களை நியமித்திருப்பதும், ஒரு மாம்பழம் ரூ.21 ஆயிரத்துக்கு விலை பேசப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது மாம்பழ சீசன் என்பதால் அபூர்வ ரக மாம்பழங்களை பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது, ‘நூர்ஜஹான் மாம்பழம்’. இந்த மாம்பழ ரகத்தின் சிறப்பு என்ன தெரியுமா? இதன் அளவுதான். ஒரு மாம்பழம் மட்டும் சராசரியாக மூன்று கிலோ முதல் மூன்றரை கிலோ எடை கொண்டிருக்கிறது. இது மாம்பழம்தானா என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பிரமாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது. எடை அதிகமாக இருப்பதை விட அரிய ரகமாக விளங்குவதால் இதன் விலையும் அதிகமாகவே இருக்கிறது. ஒரு மாம்பழத்தை 1,500 ரூபாய் வரை விற்கிறார்கள். அதுவும் இந்த பெரிய மாம்பழ ரகம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அதிகம் உற்பத்தியாகிறது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கதிவாடா பகுதியை சேர்ந்த சிவ்ராஜ் சிங் ஜாதவ் என்பவருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் இந்த நூர்ஜஹான் மாம் பழம் விளைகிறது. முகலாய ராணியின் பெயரிடப்பட்ட இந்த அரிய மாம்பழம் நாட்டின் மிகப் பெரிய மாம்பழ ரகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. எடைக்கு ஏற்ப ஒரு அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டிருக்கிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்குகின்றன. ஜூன் மாதத்தில் மாங்காய்கள் காய்த்து குலுங்கி அறுவடைக்கு தயாராகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக மத்திய பிரதேசத்திற்கு இந்த மாம்பழம் வந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இதுபற்றி சிவ்ராஜ் சொல்கிறார்.

‘‘1965-ம் ஆண்டு எனது தந்தை இந்த விவசாய பண்ணையை தொடங்கினார். அப்போது ஒரு ஒட்டுண்ணி ரகத்தில் இருந்து இந்த மாமரத்தை வளர்த்திருக்கிறார். இன்று நாங்கள் ஐந்து நூர்ஜஹான் மா மரங்களை பராமரிக் கிறோம். இவை தவிர 16 ஏக்கர் கொண்ட எங்கள் பழ தோட்டத்தில் 33 வகையான மாமரங்களையும் வளர்க்கிறோம். அவற்றுள் நூர்ஜஹான் மா மரங்கள்தான் தனித்துவமானவை. இவை சுமார் 50 அடி உயரத்திற்கு வளர்கின்றன. ஒவ்வொரு மரத்தில் இருந்தும் சராசரியாக 100 மாங்காய்கள் காய்த்து குலுங்கும். ஆனால் இந்த சீசனில் ஐந்து மரங்களில் இருந்து 350 மாம்பழங்களை அறுவடை செய்தோம். பழங்களின் எடை, தன்மையை பொறுத்து விலையை நிர்ணயிக்கிறோம். ஒரு மாம்பழத்தை ரூ.500 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்கிறோம். இந்த மாம்பழத்தின் மூலமே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறோம்’’ என்று பெருமிதம் கொள்பவர் மாம்பழங்கள் பருமனாக இருப்பதற்கான காரணத்தை விளக்குகிறார்.

‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையும் மாம்பழங்களுடன் ஒப்பிடும்போது எங்கள் பண்ணையில் விளையும் பழங்கள் பெரியவை என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். மண்ணின் தரம், மழைப்பொழிவு, வானிலை மற்றும் பிற புவியியல் நிலைமைகள்தான் மரங்கள் செழித்து வளர உதவுகிறது’’ என்கிறார்.

மியாசாகி மாம்பழ ரகம் போலவே நூர்ஜஹான் மாம்பழமும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி இருக்கிறது. அதுபற்றி குறிப்பிடும் சிவ்ராஜ, ‘‘எங்கள் மாம்பழங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. 1978-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எங்கள் மாம்பழங்களை பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 ஆயிரம் பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை எங்கள் பண்ணையை பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டுதான் மாம்பழத்தின் படங்களும், அவை பற்றிய தகவல்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது’’ என்கிறார்.

நாக்பூரை சேர்ந்த எஸ்.ஆர்.தாகூர் என்பவரும் நூர்ஜஹான் மாம்பழ ரகத்தை வளர்க்கிறார். ‘‘மாம்பழங்களின் குணாதிசயங்கள் தான் வாங்குபவர்களை ஈர்க்கின்றன. இந்த மாம்பழத்தின் சுவை குங்குமப்பூவை ஒத்திருக்கும். இந்த மாம்பழம் அளவில்தான் பெரியதாக இருக்கிறது. ஆனால் அதன் தோல் மென்மையானது. விதையும் சிறியது’’ என்கிறார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!