நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா அச்சுறுத்தல்: விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு

கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக விமான நிலையங்களில் இன்று முதல் (வியாழக்கிழமை) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கொரோனாவின் 2 வது அலை என்று இதனை கூறுகிறார்கள். தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் விமான நிலையங்களிலும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விமான பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

மேலும், விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!