மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இளைஞர் லிவிஸ் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட விபத்த்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளன்னர். இதையடுத்து, லிவிஸ் 4 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதைதொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் தங்கள் மகனின் நிலைமையை பார்த்து மனவேதனையில், சம்மதம் தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்புகளை எடுப்பதற்க்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகிய நிலையில் லிவிசின் அக்கா ஜேட், ICUவில் இருக்கும் தனது தம்பியின் அருகில் அமர்ந்து அவரது கையை பிடித்து, இதுதான் தான் கடைசியாக தனது தம்பியிடம் பேசுவது என நினைத்து கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
அப்போது, அவர் "நான் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்வேன். உடனே நீ சுவாசிக்க வேண்டும் எனத் தனது மனதில் தோன்றியதைக் கூறியுள்ளார்". அப்போது அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கு அவரது தம்பியை எடுத்து செல்ல மருத்துவர்கள் உள்ளே வந்துள்ளனர். உடனே அவரது அக்க ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்லியுள்ளார்.
அப்போது ஆச்சர்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அவரின் அக்கா பேசுவதை கேட்ட லிவிஸ் மூச்சு விட தொடங்கி, கண்சிமிட்டவும் செய்துள்ளார். இதனை பார்த்ததும் மருத்துவர்கள் ஒருநிமிடம் ஆடிப்போனார்கள். மூளைச்சாவு அடைந்த அந்த இளைஞர் தற்போது தானாக சுவாசிப்பதும், கண்சிமிட்டுவதும் அவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.
உடனே அறுவை சிகிச்சை வேலைகளை நிறுத்திவிட்டு அந்த இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்க தொடங்கி, தற்போது அந்த இளைஞர் கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும், கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.
Comments
Post a Comment