நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சமிபகாலத்தில் அதிகமானோரால் உச்சரிக்கப்படும் Bitcoin என்பது என்ன?

சமிபகாலத்தில் அதிகமானோரால் உச்சரிக்கப்படும் இந்த Bitcoin என்றால் என்ன, Cryptocurrency என்றால் என்ன, என்பதை அறிந்துகொள்வோம்.

குறுகிய காலத்தில் உழைப்பின்றி இலகுவாக அதிக பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் அண்மைக் காலங்களில் அதிகமானோர் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பல மில்லியன் ரூபாய்களை இந்த Bitcoin களில் முதலிட்டு வருகின்றனர்.

இதில் அதிகமானோருக்கு இந்த Bitcoin என்றால் என்ன என்பதே புரிவதில்லை. அண்மையில் நான் சந்தித்த ஒருவர் தான் Bitcoin இல் முதலிட்டுள்ளதாகவும் அவருக்கு வெகு விரைவில் படத்தில் காட்டியுள்ளது போல நாணயங்கள் கிடைக்கவுள்ளதாகவும் மகிழ்வுடன் குறிப்பிட்டிருந்தார். படத்தில் காட்டப்பட்டுள்ளது ஒரு சித்தரிப்பு நாணயம்தான் என்பதும் Bitcoin என்பது உண்மையில் ஒரு பௌதிக ரீதியான நாணயம் இல்லை என்பது கூட தெரியாமல் பல மில்லியன் ரூபாய்களை அவர் Bitcoin இல் முதலிட முனைந்தது அறியாமையா? அல்லது என்ன என்றே புரியவில்லை.
உண்மையில் இந்த Bitcoin தொடர்பில் பல தரகர்கள் திடீரென்று முளைத்திருப்பதுடன் அவர்களின் வார்த்தைகளை நம்பியே பல கோடி ரூபாய்கள் இவ்வாறு Bitcoin களில் முதலீடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் நஷ்டங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நிறுவனங்கள் அவற்றை எந்தளவுக்கு பொறுப்பேற்கும் என்பது கேள்விக்குறியே.

இந்த நிலையில் Bitcoin என்றால் என்ன? படத்தில் காணப்படும் Bitcoin நாணயங்களுக்கும் இந்த Bitcoin களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த Bitcoin பயன்பாடு எமது நாட்டில் சட்ட ரீதியானதா? அல்லது சட்ட விரோதமானதா? Bitcoin Trading இற்கும் Share Trading இற்கும் என்ன வித்தியாசம்.

அதாவது Bitcoin என்பது உண்மையில் ஒரு மத்தியமயப் படுத்தப்படாத (Decentralized) அல்லது பன்முகப் படுத்தப்பட்ட ஒரு எண்ம அல்லது டிஜிட்டல் நாணயம் (Digital Currency) ஆகும். இந்த நாணயம் பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் (Transactions) யாவும் ஒரு மெய்நிகர் பதிவேட்டில் (Virtual Ledger) பதிவு செய்யப்படும். இந்த பதிவேடுகள் Block chains என்று அழைக்கப்படுவதுடன் எல்லோராலும் பார்வையிடப்படவும் முடியும். Bitcoin இன் பிரதான நன்மை என்னவென்றால் எமது பணத்தின் மீதான பூரண உரிமை எமக்கு இருப்பதுடன் இது எந்த ஒரு வங்கியாலோ அல்லது அரசினாலோ ஒழுங்குபடுத்தப் படாது.

இது பற்றி மேலும் அறிய முதலில் பணம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1. பணம் என்பது என்ன?

Bitcoin தொடர்பில் மேலும் பேசுவதற்கு முன்னர் பணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். பணம் என்றால் என்ன? அடிப்படையில் பணம் என்பது ஒரு பெறுமதியைக் குறிக்கிறது. நாம் ஒரு வேலையினை செய்யும்பொழுது அந்த வேலையின் பெறுமதிக்கு மாற்றாக நாம் பணத்தைப் பெற்றுக் கொள்கிறோம். அந்த பணத்தினைக் கொண்டு பின்னர் அதன் பெறுமதிக்கு நிகராக வேறு ஒரு சேவையினை எமக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

பண்டமாற்று முறை ஒழிந்த பிறகு வரலாறு நெடுகவும் இந்த பணத்தின் பெறுமதியைக் குறிக்கும் முகமாக பல பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. உப்பு, கோதுமை, சிப்பிகள் ஏன் தங்கம் கூட ஒரு பணத்திற்குப் பதிலாக பயன்படுத்தப் பட்டுள்ளன.

உண்மையில் ஒரு பொருளை இவ்வாறு பெறுமதியைக் குறிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதனை பயன்படுத்துபவர்கள் முதலில் அந்தப் பொருளின் பெறுமதியை நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். அதாவது அந்தப் பொருளின் பெறுமதி வலிதானது என்றும் அத்துடன் நீண்ட காலத்தின் பின்னரும் அந்தப் பெறுமதியை அவர்கள் அந்தப் பொருளிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை பெறுமதியைக் குறிக்க எதோ ஒரு பொருளினை நம்பிக் கொண்டிருந்த மக்கள் பின்னர் மெதுவாக அந்த நம்பிக்கையை வேறு திசை நோக்கி செலுத்த தலைப்பட்டனர்.

அதாவது தங்கத்தையோ அல்லது வேறு பொருட்களையோ பணமாக பயன்படுத்தியபோது மக்களுக்கு அவற்றை கொண்டு திரிவது மிகவும் ஒரு சிரமமான செயற்பாடாக இருந்தது. இதனால் காகித நாணய தாள்கள் உருவாகின.

உதாரணமாக ரூபா.1,000 பெறுமதியான தங்கக் கட்டியை நீங்கள் வங்கியிடமோ அல்லது அரசிடமோ வழங்கினால் அவர்கள் உங்களுக்கு ரூபா.1,000 பெறுமதியான பற்றுச்சீட்டுப் பத்திரங்களைத் தருவார்கள். இதனால்தான் பணங்களுக்கு பத்திரங்கள் (Bills) என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்த காகித நாணயத் தாள்கள் பயன்படுத்த இலகுவாக இருந்ததுடன் இதனால் ஏற்பட்ட இன்னொரு நன்மை சிறிய சிறிய பொருட்களைக் கொள்வனவு செய்ய பெரிய ஒரு தங்கக் கட்டியை பல நூறு துண்டுகளாக உடைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதுபோல உங்களுக்கு தங்கக் கட்டி தேவையாக இருக்கின்றபோது மீண்டும் வங்கிக்கு சென்று ரூபா.1,000 பெறுமதியான பத்திரங்களை சமர்ப்பித்து தங்கக் கட்டியை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு காகித நாணயங்கள் அவற்றின் சிக்கல்கள் குறைந்த தன்மையாலும் இலகு தன்மையாலும் மக்களிடம் பிரசித்தி பெற்றன. இருந்தாலும் பின்னாட்களில் பாரிய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட போது இந்த காகித நாணயத் தாள்களுக்கும் தங்கக் கட்டிகளுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போனது.

அதாவது பணத்தின் பெறுமதியை தங்கக் கட்டிகள் தீர்மானித்த முறை எப்படி மாறியது என்பது ஒரு சிக்கலான பொறிமுறையாக இருந்தாலும் இலகுவாக இதனை அரசாங்கங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டன எனலாம். அதாவது அரசு அறிவித்து விட்டது இனிமேல் காகித நாணயத் தாள்களின் பெறுமதியை நாம் உறுதி செய்கிறோம். அதற்காக மக்கள் எந்த தங்கக் கட்டிகளையும் பரிமாற்ற வேண்டிய அவசியமும் இல்லை என்று. அதனைத் தொடர்ந்து தங்கத்தின் பெறுமதியால் அல்லாமல் அரசின் வாக்குறுதியின் அடிப்படையில் காகித நாணயத் தாள்களை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அதாவது பெறுமதியை நிர்ணயிக்கும் தங்கம் போன்ற பொருட்களைத் தவிர்த்து அரசின் வெறும் வாக்குறுதியின் அடிப்படையில் மக்கள் காகித நாணயங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இவ்வாறே Fiat Money எனப்படும் அரச நாணயங்கள் அறிமுகமாகின.

Fiat என்பது இலத்தீன் மொழியில் ஆணையின் படி என்று பொருள்படும். அதாவது நாணயங்கள் அரசின் ஆணையின்படியே அதில் குறிக்கப்பட்டுள்ள பெறுமதியைப் பெற்றுக் கொள்கின்றன. இது சட்ட ரீதியான ஒரு ஒப்பந்தத்திற்கு வழிகோலுகிறது. அதாவது நாணயங்களோ அல்லது நாணயத் தாள்களோ கொடுப்பனவிற்கு வழங்கப்பட்டால் அவை அந்தந்த பெறுமதிக்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது அரச ஆணை.

எனவே இன்றைய பணத்தின் பெறுமதி என்பது அரசு போன்ற ஒரு மத்திய அதிகாரத்தினால் வழங்கப்படும் சட்டரீதியான அந்தஸ்திலிருந்தே எழுகின்றது எனலாம். இதுவே மக்களின் நம்பிக்கை என்பது பொருட்களிலிருந்து வேறு ஒரு நபர் அல்லது நிறுவனம் நோக்கி சென்று விட்டது எனக் குறிப்பிடப்பட்டது.

அரச நாணயங்களில் (Fiat Money) இரண்டு பாரிய குறைபாடுகள் உண்டு.

1. அது மத்திய அதிகாரத்திற்கு உட்பட்டது (Centralized) - அதாவது மத்திய வங்கி அல்லது அரசு அதனை கட்டுப்படுத்துகின்றது.

2. அதன் அளவு எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல (Not limited by quantity) – அதாவது அரசு அல்லது மத்திய வங்கி அவர்களது விருப்பத்திற்கு இணங்க எவ்வளவு பணத்தையும் அச்சிட்டு சந்தைக்கு வழங்கி பணவீக்கத்தினை ஏற்படுத்த முடியும். அதாவது எந்தளவு அதிகமாக சந்தைக்கு பணம் புழக்கத்திற்கு விடப்படுகிறதோ அந்தளவு பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது. அதாவது எங்கள் கையிருப்பில் உள்ள பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அதற்கிணங்க பொருட்களின் விலைகள் அதிகரிப்பதனால் எமது கையிருப்பிலுள்ள பணத்தின் கொள்வனவுத் தகைமையும் (Purchasing Power) வீழ்ச்சியடைகிறது.

2. எண்ம நாணயங்களை நோக்கிய படிநிலைமாற்றம்

அரச நாணயங்களின் புழக்கத்தில் எண்ம அல்லது டிஜிட்டல் நாணயங்களை நோக்கிய நகர்வு அவ்வளவு ஒன்றும் சிரமமானதாக இருக்கவில்லை. இந்த பொறிமுறையின் படி எமக்கு ஏற்கனவே நாணயங்களை வழங்கும் ஒரு மத்திய அதிகாரிகள் குழு உண்டு. எனவே அவர்களே அதனை டிஜிட்டல் மயப்படுத்தி ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் உண்டு என்பதையும் கண்காணித்துக் கொள்வார்கள்.

இன்று நாம் இந்த டிஜிட்டல் நாணய பரிமாற்றங்களில் பெருமளவு கடன் அட்டைகளையும் (Credit/Debit Cards), வங்கிகளிடை பணப் பரிமாற்றங்களையும் (Wire Transfers), Paypal போன்ற பல்வேறுவகை டிஜிட்டல் தளங்களையும் பயன்படுத்துகின்றோம். அதாவது டிஜிட்டல் ரீதியான பரிவர்த்தனைகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் உலகளாவிய ரீதியில் புழக்கத்தில் உள்ள பௌதிக ரீதியான நாணயத் தாள்களும் குற்றிகளும் மிகவும் சிறிய அளவாக சுருங்கி விட்டது என்றும் அது ஒவ்வொரு வருடமும் மேலும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம்? உதாரணமாக எனது கணினியில் காணப்படும் ஒரு கோப்பு (File) ஒரு ரூபாயைக் குறித்தால் அதில் உள்ள முக்கிய குறைபாடு நான் அந்த கோப்பினை பல தடவைகள் பிரதி செய்து பல மில்லியன் ரூபாய்களை உருவாக்கி கொள்ளலாம். இந்த சிக்கல்தான் இரட்டை செலவு சிக்கல் (Double Spend problem) என்று அழைக்கப்படுகிறது. இது இரட்டை செலவு என்று பெயரிடப் பட்டாலும் பல நூறு மடங்குகளுக்கும் பிரதி செய்யப்படலாம்.

இதற்கு வங்கிகள் தரும் தீர்வு மத்தியமயப்படுத்தப் பட்டது. அதாவது அவர்கள் வங்கியின் கணினியில் ஒரு பதிவேட்டினை வைத்து யாரிடம் எவ்வளவு பணம் உண்டு என்பதை பதிவு செய்து வைப்பார்கள். இந்த பதிவேட்டில் எம் ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இது ஏனைய கணக்குகள் மற்றும் பணத்துடன் எப்போதும் சமப் படுத்தப்படும். இந்த விடயத்தில் நாம் வங்கியை நம்புகிறோம். வங்கி தங்கள் கணணிகளை நம்புகிறது. தீர்வு என்பது இங்கு கணினி மயப்படுத்தப்பட்ட மத்திய பதிவேட்டில் உள்ளது.

இவ்வாறான டிஜிட்டல் நாணயங்களுக்கு மாற்றாக பல டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் ஒரு மத்தியநிலை அதிகாரம் உள்ள ஒரு அதிகார குழு இல்லாமல் இந்த இரட்டை செலவு சிக்கலுக்கு எந்த ஒரு முயற்சியும் தீர்வு வழங்கவில்லை என்பது பெரிய பின்னடைவாக காணப்பட்டது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!