நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இது தான் கடவுள் சக்தியாம்! மக்கள் முகத்தின் மீது அமர்ந்து ....மதபோதகரின் அருவருக்கத்தக்க செயல்.....

தென்னாப்பிரிக்காவில் ஒரு மதபோதகர், மக்கள் முகத்தின் மீது அமர்ந்து செய்யும் அருவருக்கத்தக்க செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்து பெனிலோப் என்ற மத போதகர் தன்னிடம் வரும் பக்தர்களின் ஆன்மீக மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் குணப்படுத்தும் செயல்முறையாக மக்கள் முகங்களின் மேல் உட்கார்ந்து குசு விடுவாராம். இதுதொடர்பான புகைப்படம் இணையதளங்களில் பரவியதால் அந்த மதபோதகர் வைரலானார்.
தான் இவ்வாறு செய்வதால் பல அற்புதங்களைச் செய்ய முடியும் என்றும், குணப்படுத்தும் சக்தி உடலில் நுழைந்து அதன் வேலையைச் செய்யக்கூடிய வகையில் நபரின் நாசிக்கு அருகில் இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

இது கடவுளின் சக்தியின் நிரூபணம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.. ஆச்சரியப்படும் விதமாக, அவரது வணிகம் வளர்ந்து வருகிறது.. 'புனித குசுக்களை' முகத்தில் பெற நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருப்பது மட்டுமல்லாமல், சிலர் அவரை சந்திக்க இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள்.

அவரது படங்கள் வைரலாகிவிட்ட பிறகு, பல போதகர்கள் அவரது நடத்தையை கண்டித்து வருகின்றனர். மேலும் அந்த பாஸ்டர், மக்கள் மீது அமரக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. தென்னாப்பிரிக்காவின் காகிசோவைச் சேர்ந்த பாஸ்டர் ஜேக்கப் சிபியா இதுகுறித்து பேசிய போது, "இது தவறு. மக்கள் மீது உட்கார்ந்து கொள்ளுங்கள், அவர்கள் குணமடைவார்கள் என்று எங்கும் கடவுள் சொல்லவில்லை. போதகர்கள் பைபிளில் உள்ளதைக் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படி இருப்பதாக நான் நினைக்கவில்லை. " என்று தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!